• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • பாமகவின் நிலைப்பாடு மாவட்டத்திற்கு மாவட்டம் மாறுபடுகிறது - பாஜக பொதுச்செயலளார்

பாமகவின் நிலைப்பாடு மாவட்டத்திற்கு மாவட்டம் மாறுபடுகிறது - பாஜக பொதுச்செயலளார்

கரு.நாகராஜன்

கரு.நாகராஜன்

அதிமுக தலைமை அலுவலகத்தில் பாஜக-அதிமுக இடையே உள்ளாட்சித் தேர்தல் இடப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்றது.

  • Share this:
    செங்கல்பட்டு மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் இடப் பங்கீடு தொடர்பாக , அதிமுக, பாஜக இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்நிலையில், பாஜக பொதுச்செயலாளர் கரு.நாகராஜன், ஊரக உள்ளாட்சித் தேர்தலில் விருப்ப இடங்களுக்கான பட்டியலை அதிமுகவிடம் பாமக வழங்கியிருப்பதாகவும், பாமகவின் நிலைப்பாடு மாவட்டத்துக்கு மாவட்டம் மாறுபடுகிறது என்றும் கூறினார்.

    அதிமுகவுடன் பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து சட்டமன்ற தேர்தலை எதிர்கொண்ட நிலையில், உள்ளாட்சித் தேர்தல் அறிவித்த மறுதினமே, தனித்துப் போட்டியிட போவதாக பாமக அறிவித்தது. அதனை தொடர்ந்து அதிமுக கூட்டணியில் பாஜக நீடிக்குமா அல்லது உள்ளாட்சித் தேர்தலில் தனித்து களம் காணுமா என்கிற கேள்விகள் எழுந்தன. இந்த சூழலில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இரு கட்சிகள் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றது.

    அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி மற்றும் நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோரும் பாஜக தரப்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் கரு.நாகராஜன், கராத்தே தியாகராஜன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். பிற்பகலுக்கு பின் நடந்த பேச்சுவார்த்தையில் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார். செங்கல்பட்டு மாவட்டத்தில் யார் எந்த பதவிகளுக்கு போட்டியிடுவது என்பது பற்றி ஆலோசனை நடைபெற்றது.

    அதிமுக தரப்பில் முன்னாள் அமைச்சர் தங்கமணி மற்றும் நத்தம் விஸ்வநாதன், பாஜக தரப்பில் பொதுச்செயலாளர் கரு. நாகராஜன், கராத்தே தியாகராஜன் மற்றும் தேசிய பொதுக்குழு உறுப்பினர் வேத சுப்பிரமணியன் செங்கல்பட்டு மாவட்ட தலைவர் பலராமன் ஆகியோர் பேச்சுவார்த்தையில் பங்கேற்கின்றனர்.

    Must Read : உள்ளாட்சி தேர்தல் : காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் சீமான்

    செங்கல்பட்டு மாவட்டத்தை பொருத்தவரை 16 மாவட்ட கவுன்சிலர்கள், 156 ஒன்றிய கவுன்சிலர்களுக்கான போட்டி நடைபெற உள்ளது. இதற்கான ஆலோசனை தேர்தல் பொருப்பாளர்களுடன் நடைபெற்று வருகிறது. இந்நிலைரயில், 2 ஆம் கட்ட பேச்சுவார்த்தைக்கு செல்லும் முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த, பாஜக பொதுச் செயலாளர் கரு.நாகராஜன், ஊரக உள்ளாட்சித் தேர்தலில் விருப்ப இடங்களுக்கான பட்டியலை அதிமுகவிடம் பாமக வழங்கியிருப்பதாக கூறினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: