• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தமிழக பா.ஜ.கவுக்கு விரைவில் புதிய தலைவர் நியமிக்கப்படுவார் - கரு.நாகராஜன்

தமிழக பா.ஜ.கவுக்கு விரைவில் புதிய தலைவர் நியமிக்கப்படுவார் - கரு.நாகராஜன்

கரு நாகராஜன்

கரு நாகராஜன்

அ.தி.மு.க புறக்கணிக்கப்பட்டுள்ளது என்று கூறுவது சரியல்ல என்று பா.ஜ.க பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் தெரிவித்துள்ளார்.

  • Share this:
    தமிழக பா.ஜ.கவுக்கு விரைவில் புதிய தலைவர் நியமிக்கப்படுவார் என்று அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் தெரிவித்துள்ளார்.

    தமிழக பா.ஜ.கவின் தலைவராக இருந்த தமிழிசை சௌந்தர்ராஜன், 2019-ம் ஆண்டில் தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். அதனையடுத்து, ஓரிரு மாதங்கள் கழித்து பா.ஜ.க தலைவராக எல்.முருகன் நியமிக்கப்பட்டார். பா.ஜ.க தலைவராக எல்.முருகன் நியமிக்கப்பட்டதிலிருந்து அவர், தமிழகத்தில் பா.ஜ.க வளர்த்தெடுக்க தீவிர முயற்சிகளை மேற்கொண்டார். தமிழ்க் கடவுள் முருகன் குறித்து கருப்பர் கூட்டம் இழிவாக பேசியதாக விமர்சனம் எழுந்தது.

    இதுதொடர்பாக வீடியோ பதிவிட்ட நபர் கைது செய்யப்பட்ட நிலையிலும், அந்த விவகாரத்தை தொடர்ந்து பிரச்னையாக எழுப்பினார் எல்.முருகன். கடவுள் முருகனை அவதூறாக பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் வேல் யாத்திரை அறிவித்தார். அ.தி.மு.க கூட்டணியில் இருந்தபோதும் ஆட்சிக்கு எதிராக வேல் யாத்திரை அறிவித்தார். தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.கவுடன் கூட்டணி அமைத்து பா.ஜ.க தேர்தலை எதிர்கொண்டது. 20 தொகுதிகளில் பா.ஜ.க போட்டியிட்டது.

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் போட்டியிட்ட எல்.முருகன் தி.மு.க வேட்பாளரிடம் தோல்வியடைந்தார். இந்தநிலையில், மத்திய அமைச்சரவை விரிவாகத்தில் எல்.முருகனுக்கு இடமளிக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து, தமிழக பா.ஜ.க அலுவலகத்தில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கரு.நாகராஜன், ‘மாற்றி அமைக்கப்பட்டுள்ள அமைச்சரவையில், எல்.முருகன் பெயர் இடம் பெற்று இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    தமிழக மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் அமைச்சரவையில் இல்லை. இந்த தவிப்பு அனைவரிடத்தும் இருந்தது. தற்போது அந்த குறை நீக்கப்பட்டிருக்கிறது. பா.ஜ.கவில் உழைப்பவர்களுக்கு எத்தகைய பதவியும் கிடைக்கும் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. புதிய தலைவர் விரைவில் அறிவிக்கப்படுவார். அ.தி.மு.க புறக்கணிக்கப்பட்டுள்ளது என சொல்வது சரியல்ல’ என்று தெரிவித்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: