ஒன்றிய அரசு என்று அழைப்பது தொடர்பாக தேவைப்பட்டால் வழக்குத் தொடர்வோம் - பா.ஜ.க பொதுச் செயலாளர் கரு.நாகராஜன்

கரு நாகராஜன்

ஒன்றிய அரசு என்று அழைப்பது தொடர்பாக தேவைப்பட்டால் வழக்குத் தொடர்வோம் என்று பா.ஜ.க பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் தெரிவித்துள்ளார்.

 • Share this:
  தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க வெற்றி பெற்றது. அதனையடுத்து, மே 7-ம் தேதி மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க அரசு பொறுப்பேற்றது. தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து இதுவரையில் மத்திய அரசு என்று அழைக்கப்பட்டதை அதிகாரப்பூர்வமாக ஒன்றிய அரசு என்று அழைத்து வருகிறது. தி.மு.க எம்.எல்.ஏக்கள் அமைச்சர்கள் என அனைவரும் ஒன்றிய அரசு என்றே அழைக்கின்றனர். அதேபோல, தி.மு.க கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்டவர்களும் ஒன்றிய அரசு என்றே அழைக்கின்றனர்.

  இதில், தி.மு.க ஒன்றிய அரசு என்று அழைப்பதற்கு பா.ஜ.க கண்டனம் தெரிவித்துவருகிறது. இந்தநிலையில், நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத் தொடரில் ஒன்றிய அரசு என்று அழைப்பது குறித்து பா.ஜ.க எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘அரசியலமைப்புச் சட்டத்தில் ஒன்றிய அரசு என்றுதான் உள்ளது. அதைக் குற்றமாக கருதவேண்டாம்’ என்று விளக்கம் அளித்தார்.

  இந்தநிலையில், செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க பொதுச் செயலாளர் கரு.நாகராஜன், ‘தமிழகத்தில் மீதமுள்ள பகுதிகளுக்கு உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும்போது தேர்தலில் போட்டியிடுவது குறித்து செயற்குழுவில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. மத்தியில் எல்லா கட்சி கூட்டணியிலும் ஆட்சியில் இருந்த தி.மு.க இப்போது எதோ புதிதாக கண்டுபிடித்தது போல் மத்திய அரசை ஒன்றிய அரசு என்று சொல்கிறார்கள். ஒன்றிய அரசு என்று சொல்வதால் தமிழகத்திற்கு ஏதேனும் நன்மை இருக்கிறதா? பெருமை இருக்கிறதா ?

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  ஒன்றிய அரசு என்பது மக்களை திசை திருப்பும் முயற்சி. நிதியமைச்சர் குழப்பமான ஒரு அமைச்சராக இருக்கிறார். கற்பனையில் பேசி வருகிறார். பெட்ரோல் மீதான வரியில் 32.90 ரூபாயை மத்திய அரசு எடுத்து கொள்கிறது என்று அப்பட்டமான ஒரு பொய்யை நிதியமைச்சர் கூறுகிறார். ஒன்றிய அரசு என தமிழக அரசு அழைப்பது குறித்து பாஜக சார்பில் தேவைப்பட்டால் வழக்கு தொடுப்போம்’ என்று தெரிவித்தார்.
  Published by:Karthick S
  First published: