சூர்யாவால் முடிந்தால் ஏழை பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி மையம் நடத்தி மருத்துவராக்கட்டும் - பா.ஜ.க பொதுச்செயலாளர் கரு.நாகராஜன்

கரு நாகராஜன் சூர்யா

சூர்யாவால் முடிந்தால் ஏழை அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி கொடுத்து மருத்துவர்கள் ஆக்கட்டும் என்று பா.ஜ.க பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் தெரிவித்துள்ளார்.

  • Share this:
சென்னை தியாகராய நகரில் உள்ள கமலாலயத்தில் பா.ஜ.க மாநிலப் பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராயும் ஏ.கே.ராஜன் குழுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ள. இதுதொடர்பான விசாரணையின் போது உயர்நீதிமன்றம், மாநில அரசிடம் சில கேள்விகளை எழுப்பியது.

ஏ.கே.ராஜன் குழு உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது. நீட் தேர்வில் சமூக நீதி உள்ளது. மருத்துவப் படிப்புகளில் இட ஒதுக்கீடு கடைபிடிக்கப்படுகிறது. 12-ஆம் வகுப்பு அடிப்படையில் மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்றபோது, அதில் குறைந்த மதிப்பெண் பெற்றவர்களுக்கு, மருத்துவக் கனவுக்கான முற்றுப்புள்ளி உடனடியாக வைக்கப்படுகிறது.

ஆனால் நீட் தேர்வில் 3 வாய்ப்புகள் வழங்கப்படுகிறது. முதல்முறை தோல்வி அடைந்தாலும், அடுத்தடுத்த முறைகளில் எழுதி மருத்துவர் கனவை நனவாக்கிக்கொள்ளலாம். கடந்த ஆண்டில் ஏழை அரசுப் பள்ளி மாணவர்கள் 405 பேருக்கு மருத்துவப் படிப்புகளில் இடம் கிடைத்தது.

சகோதரி அனிதாவின் மறைவைக் காரணம் காட்டி உச்ச நீதிமன்றத்தை நாடிய தி.மு.கவால், கூட்டணி அரசில் பங்கெடுத்திருந்தபோது, அதைத் தடுக்க முடியவில்லை. 7 பேர் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வுக்கு எதிராக எப்படி குழு அமைக்க முடியும்?

நீட் தேர்வின் தாக்கம் குறித்து உதயநிதி ஸ்டாலின் கூட கருத்து தெரிவித்தார். இது அரசியல். சட்டரீதியாக ஆதரவளிப்போம் என்று நயினார் நாகேந்திரன் பேசினார். சட்டரீதியாக என்றால் மீண்டும் உச்ச நீதிமன்றத்தை நாடுவதே. குழு அமைப்பதல்ல. மாணவர்களை குழப்பக் கூடாது. பா.ஜ.கவினர் சட்டத்தை மதிப்பவர்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சூர்யா ஒரு சிறந்த நடிகர். அவ்வளவு தான். முடிந்தால், ஏழை அரசுப்பள்ளி மாணவர்களுக்கு சூர்யா நீட் பயிற்சி மையம் நடத்தி மருத்துவராக்கட்டும்’ என்று தெரிவித்துள்ளார்.
Published by:Karthick S
First published: