முகப்பு /செய்தி /தமிழ்நாடு / எடப்பாடி பழனிசாமியை தாக்கி பேசிய பாஜக நிர்வாகி... உடனே மைக்கை பிடுங்கிய கரு.நாகராஜன்..!

எடப்பாடி பழனிசாமியை தாக்கி பேசிய பாஜக நிர்வாகி... உடனே மைக்கை பிடுங்கிய கரு.நாகராஜன்..!

பாஜக போராட்டம்

பாஜக போராட்டம்

அண்ணாமலை மீது பொய் வழக்கு போட்டுள்ளதாக தமிழக அரசைக் கண்டித்து பாஜக சார்பில் போராட்டம் நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai [Madras], India

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது பொய் வழக்கு போட்டுள்ளதாக தமிழக அரசைக் கண்டித்து, பாரதிய ஜனதா கட்சி சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது பாஜக சென்னை கிழக்கு மாவட்டத் தலைவர் விஜய் ஆனந்த், எடப்பாடி பழனிசாமியை தாக்கி பேச முயற்பட்டார். அருகில் நின்ற பாஜக மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் உடனே அவரிடம் இருந்து மைக்கை வாங்கினார்.

பாஜக, அதிமுக நிர்வாகிகள் இடையே கடந்த சில தினங்களாக வார்த்தைப் போர் முற்றியது. இந்த நிலையில், அது மேலும் தொடராமல் இருக்கும் வகையில் கரு.நாகராஜனின் செயல் இருந்ததாக பார்க்கப்படுகிறது.

' isDesktop="true" id="907687" youtubeid="21z83k4cHeU" category="tamil-nadu">

இந்த போராட்டத்தில் தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினர் குஷ்பு, உமா ஆனந்த் ஆகியோர் கலந்துகொண்டனர்.

First published:

Tags: Annamalai, BJP, BJP cadre, Edappadi Palaniswami