நீட் தேர்வில் சமூக நீதி காக்கப்படுகிறது: தி.மு.க பொய் பிரச்சாரத்தை நிறுத்த வேண்டும் - பா.ஜ.க பொதுச் செயலாளர் கரு.நாகராஜன்

கரு நாகராஜன்

நீட் தேர்வுக்கு எதிரான பொய் பிரச்சாரத்தை தி.மு.க நிறுத்த வேண்டும் என்று பா.ஜ.க பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் தெரிவித்துள்ளார்.

  • Share this:
    நீட் தேர்வினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்வதற்கா முன்னாள் நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. இந்தநிலையில், முன்னாள் நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைத்ததை எதிர்த்து தமிழக பா.ஜ.க பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், ‘மத்திய - மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முரணான நிலைபாட்டை எடுக்க முடியாது என தமிழக அரசுக்கு அறிவுறுத்திய நீதிமன்றம் குழு அமைக்க உச்ச நீதிமன்றத்தின் அனுமதி பெறப்பட்டதா எனவும் அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது

    இந்நிலையில் சென்னை உயர்நீதமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க பொதுச்செயலாளர் கரு.நாகராஜன், ‘ஏழு பேர் கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய அமர்வு நீட் தேர்வில் எந்த பாதிப்பும் இல்லை என தீர்ப்பில் தெளிவாக குறிபிட்டபோதும் ஓய்யு பெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் எதன் அடிப்படையில் இந்த குழுவை ஏற்றார் என கேள்வி எழுப்பினார். 85 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டதாக ஏ.கே.ராஜன் தலைமையிரான குழு கூறுகிறது. ஒரே கணிணியில் இருந்தும் 1000-த்திற்கும் மேற்பட்ட மின்னஞ்சல்களை அனுப்ப முடியும் எனவும் உதயநிதி ஸ்டாலின் மனு கொடுப்பதை போல் படம் எடுத்து அதை செய்தியாக வெளியிடுகிறார்கள். உண்மையில் இது தி.மு.க குழுவா? அல்லது நீட் பாதிப்பை ஆராய அமைக்கப்பட்ட குழுவா? எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    தொடர்ந்து பேசிய அவர், ‘தேர்தல் வாக்குறுதியில் கொடுத்துவிட்டோம் என்பதற்காக நீட் தேர்வுக்கு எதிராக தமிழக அரசு செயல்படுகிறது. ஒட்டுமொத்த இந்தியாவும் நீட் தேர்வை ஏற்கும் நிலையில் தமிழகம் மட்டும் ரத்து செய்திட முடியாது என குறிபிட்ட கரு.நாகராஜன் இனியும் ஏழை மாணவர்வளின் மருத்துவக் கனவில் விளையாடக்கூடாது எனவும் நீட் தேர்வுக்கு பிறகு 405 ஏழை மாணவர்கள் கடந்த ஆண்டு மருத்துவம் படிக்க அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் நீட் தேர்வில் சமூக நீதி காக்கப்படுகிறது. நீட் தேர்வுக்கு எதிரான பொய் பிரச்சாரங்களை நிறுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
    Published by:Karthick S
    First published: