சிவகங்கையில் ஹெச்.ராஜாவைத் தோற்கடித்த கார்த்தி சிதம்பரம்!

கடந்த 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டே 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்ற கார்த்தி, இம்முறை திமுக உடன் கூட்டணி வைத்திருப்பதால் வெற்றி நிச்சயமாகபார்க்கப்பட்டது.

Web Desk | news18
Updated: May 24, 2019, 7:40 AM IST
சிவகங்கையில் ஹெச்.ராஜாவைத் தோற்கடித்த கார்த்தி சிதம்பரம்!
கார்த்தி சிதம்பரம்
Web Desk | news18
Updated: May 24, 2019, 7:40 AM IST
சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி 52 சதவீத வாக்குகள் பெற்று பா.ஜ.க வேட்பாளர் ஹெச்.ராஜாவைத் தோற்கடித்தார்.

சிவகங்கைத் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் பாஜக-வின் ஹெச்.ராஜா போட்டியிட்டார். திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் கார்த்தி சிதம்பரம் வேட்பாளராகப் போட்டியிட்டார்.

இரு தேசிய கட்சியின் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டது சிவகங்கை மக்களவைத் தொகுதியில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. காங்கிரஸ் வேட்பாளர் அறிவிக்கப்பட்டதிலேயே உட்கட்சி பூசல் நிலவியது.

காரணம், 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது மிகவும் மோசமான தோல்வியைச் சந்தித்தார் கார்த்தி சிதம்பரம்.

ஆனால், எதிர்த்து நிற்கும் பாஜக-வின் ஹெச்.ராஜா பல சர்ச்சைகளில் சிக்கி வருபவர். தமிழகத்தைப் பொறுத்த வரையில் பாஜக-வுக்குத் துளி கூட ஆதரவு இல்லாததால் கார்த்தியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாகவே இருந்தது.

கூடுதலாக கடந்த 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டே 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்ற கார்த்தி, இம்முறை திமுக உடன் கூட்டணி வைத்திருப்பதால் வெற்றி நிச்சயமாகபார்க்கப்பட்டது.

வாக்கு எண்ணிக்கையில் தொடக்கத்திலிருந்தே கார்த்தி சிதம்பரம் முன்னிலையில் இருந்தார். ஹெச்ராஜாவை சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
First published: May 23, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...