மனுதர்மத்தை பா.ஜ.க ஏற்றுக்கொள்கிறதா என்பதை விளக்கவேண்டும் - கார்த்தி சிதம்பரம் கேள்வி

சிவகங்கை எம்.பி

மனுதர்மத்தை பா,ஜ.க ஏற்கிறதா? இல்லையா என்பதை அவர்கள் முதலில் தெளிவுபடுத்த வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.

 • Share this:
  மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம், ‘ஒரு கட்சி மூன்றாம் அணி அமைப்பது அந்த கட்சியின் விருப்பம். அவர்கள் மூன்றாம் அணி அணி அமைக்கலாம். அதில் நாம் தலையிட கூடாது. அது அவர்களுடைய சொந்த விருப்பம். தமிழக ஆளுநர் ஒரு விசித்திரமான ஆளுநர். எதில் எல்லாம் தலையிட கூடாதோ அதிலெல்லாம் அவர் தலையிடுகிறார்.எதற்கெல்லாம் ஒப்புதல் வழங்க வேண்டுமோ? அதற்கு எல்லாம் ஒப்புதல் வழங்காமல் இருக்கிறார். இது வேதனை அளிக்கிறது. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் எப்படி வெற்றி பெற்றோமோ அதேபோல வருகிற சட்டமன்றத் தேர்தலிலும் திமுக தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெறும்.

  மனுதர்ம நூலை பாஜகவினர் ஏற்றுக் கொள்கிறார்களா இல்லையா என்பதை அவர்கள் முதலில் தெளிவுபடுத்த வேண்டும். மனுதர்மம் இந்திய அரசியல் சாசனத்தைவிட உயர்ந்ததா என்பதை பாஜக தெளிவுபடுத்த வேண்டும். இதுதான் முக்கியமான விஷயம். நான் மனுதர்மத்தை நேரடியாக படித்ததில்லை. கட்டுரைகள், ஒரு சில முக்கிய நூல்கள் மூலமாக அறிந்து இருக்கிறேன். எனக்கு சமஸ்கிருதம் தெரியாது.


  ஆனால் பாஜகவினருக்கு சமஸ்கிருதம் தெரியும் என்று நினைக்கிறேன். அவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பு உண்டு. முதலில் பாஜகவினர் தான் இந்த நூலை பற்றி விளக்க வேண்டும். மனுதர்மம் என்ன கூறுகிறது அதை பற்றி விளக்கிக் கூற வேண்டும்’ என்று தெரிவித்தார்.
  Published by:Karthick S
  First published: