ரூ.7.37 கோடி வருவாயை கணக்கில் காட்டாததாக வழக்கு.. கார்த்தி சிதம்பரம் விடுவிப்பு

ரூ.7.37 கோடி வருவாயை கணக்கில் காட்டாததாக வழக்கு.. கார்த்தி சிதம்பரம் விடுவிப்பு

கார்த்தி சிதம்பரம்

ரூ.7.37 கோடி வருவாயை கணக்கில் காட்டாததாக தொடரப்பட்ட வழக்கிலிருந்து கார்த்தி சிதம்பரம் விடுவிக்கப்பட்டுள்ளார்.

 • Share this:
  வருமான வரி வழக்கில் இருந்து காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது மனைவி ஸ்ரீநிதி ஆகியோரை விடுவித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சொத்து விற்பனை செய்ததில் 7.37 கோடி ரூபாயைக் கணக்கில் காட்டவில்லை எனக்கூறி, இவர்கள் இருவருக்கும் எதிராக வருமான வரித்துறை கடந்த 2018-ல் வழக்கு தொடர்ந்தது.

  இந்த வழக்கை தள்ளுபடி செய்ய கோரி கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை, சென்னை சிறப்பு நீதிமன்றம் ஏற்கனவே தள்ளுபடி செய்தது. இந்நிலையில், இதை எதிர்த்து மேல்முறையீடு செய்த மனு, சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

  Also read: சசிகலா வெளியே வந்துவிட்டால் அதிமுகவின் தலைமை மீண்டும் அவரிடமே சென்றுவிடும் - கார்த்தி சிதம்பரம்

  அப்போது கார்த்தி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், வருமான வரி மதிப்பீட்டு நடைமுறைகளை முழுமையாக முடிக்கும் முன்னரே வழக்குப்பதிவு செய்துள்ளதால், கார்த்தி - ஸ்ரீநிதியை விடுவிக்க வேண்டும் என வாதிட்டார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி இருவரையும் வழக்கில் இருந்து விடுவித்தார்.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Rizwan
  First published: