கொரோனா தடுப்பூசி தட்டுப்பாட்டுக்கு மோடிதான் முழு காரணம் - எம்.பி கார்த்தி சிதம்பரம் குற்றச்சாட்டு

கார்த்தி சிதம்பரம்

கொரானா தடுப்பூசி தட்டுப்பாட்டிற்கு முழு காரணம் பிரதமர் மோடி தான் என்று காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.

 • Share this:
  சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், ‘எங்கு பாலியல் தொந்தரவு நடந்தாலும் பாதிப்பு உள்ளவர்களுக்கு தைரியம் கொடுத்து புகார் அளிக்க செய்ய வேண்டும். கூச்சம், அச்சம் பயமும்தான், பெரும்பாலான பாலியல் துன்புறுத்தல் புகார்கள் கொடுக்கப்படாமல் மறைக்கப்படுவதற்கு காரணம். பாலியல் புகார்களை உதாசீனப்படுத்தாமல் அதன் மேல் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். எச்.ராஜா போன்றவர்களின் தேவையில்லாத பேச்சுக்களை தற்போது கவனத்தில் எடுத்துக் கொள்ளக் கூடாது. கோவில்கள் அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் தான் செயல்பட வேண்டும்.

  லாட்டரி சீட்டை கொண்டு வர வேண்டும் என்று நான் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தும் என்பது எனக்குத் தெரியும். சர்சை தான் நல்ல விடிவுக்கு அடித்தளம் என்பதும் எனக்குத் தெரியும். லாட்டரி சீட்டின் மூலம் வரும் வருமானத்தைக் கொண்டு ஏழை எளிய மாணவர்களின் மேல் படிப்பிற்கு உதவி செய்ய முடியும். தற்போது நாட்டின் மிக முக்கிய பிரச்சினை தடுப்பூசியை பொதுமக்கள் அனைவரிடம் கொண்டு போய் சேர்ப்பது என்பதுதான்.

  கொரானா தடுப்பூசி தட்டுப்பாட்டிற்கு முழு காரணம் பிரதமர் மோடி தான். ஆறுகோடி தடுப்பூசியை வெளிநாட்டிற்கு அனுப்ப பிரதமர் எடுத்த தன்னிச்சையான முடிவு தான் தடுப்பூசி தட்டுப்பாட்டுக்கு காரணம்’ என்று தெரிவித்தார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: