கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிட கார்த்தி சிதம்பரம் விருப்பமனு தாக்கல்

கார்த்தி சிதம்பரம்

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிடவேண்டும் என்று கார்த்தி சிதம்பரம் விருப்பமனு தாக்கல் செய்துள்ளார்.

 • Share this:
  தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் கடந்த வாரம் அறிவித்தது. அதனையடுத்து, தமிழக அரசியல் கட்சிகள், கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு, தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் விருப்பமனு உள்ளிட்ட வாங்கி, விருப்பமனு வழங்கியவர்களிடம் நேர்காணல் என்று அடுத்தடுத்த பணிகளில் தீவிரம் காட்டிவருகின்றன. தி.மு.கவைப் பொறுத்துவரை, கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் விருப்பமனு வழங்கியவர்களிடம் நேர்காணல் தொடங்கியது.

  தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுச் செயலாளர் துரைமுருகன் உள்ளிட்டவர்கள் முன்னிலையில் நேர்காணல் நடைபெற்றது. தி.மு.கவில் மாவட்ட வாரியாக நேர்காணல் நடைபெற்றுவருகிறது. அதேபோல, அ.தி.மு.கவிலும் நேர்காணல் தொடங்கியுள்ளது. காங்கிரஸ் கட்சியில் பிப்ரவரி 25-ம் தேதி முதல் விருப்பமனு பெறப்பட்டுவருகிறது. இன்றுதான் விருப்பமனு வழங்குவதற்கு இறுதி நாள். தமிழகத்தில் 234 சட்டமன்றத் தொகுதிகள் தவிர்த்து காலியாக உள்ள கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியிலும் இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது.

  இந்தத் தொகுதியில் ஏற்கெனவே காங்கிரஸ் போட்டியிட்டதால் காங்கிரஸ் உறுப்பினர் போட்டியிடுவாரா அல்லது தி.மு.க போட்டியிடுமா என்பது உறுதி செய்யப்படாமல் உள்ளது. இந்தநிலையில், காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம், ‘கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி போட்டியிடுவதற்காக விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்.
  முன்னதாக கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவதற்கு மறைந்த எம்.பி வசந்த குமாரின் மகன் விஜய் வசந்த் விருப்பமனு தாக்கல் செய்துள்ளார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: