கார்த்தி சிதம்பரத்தின் மனைவி படத்தை பயன்படுத்தி பிரச்சாரம் செய்த பாஜக: கொந்தளித்த ஸ்ரீநிதி கார்த்தி

ஸ்ரீநிதி கார்த்தி சிதம்பரம்

காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரத்தின் மனைவி ஸ்ரீநிதி நாட்டியம் ஆடும் படத்தைப் பயன்படுத்தி தாமரை மலரட்டும் என்று குறிப்பிட்டு பாஜக தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்ததற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

  • Share this:
    காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரத்தின் மனைவி ஸ்ரீநிதி நாட்டியம் ஆடும் படத்தைப் பயன்படுத்தி தாமரை மலரட்டும் என்று குறிப்பிட்டு பாஜக தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்ததற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

    சமீபத்தில், பரதநாட்டியம் ஆடும் கார்த்தி சிதம்பரம் மனைவி ஸ்ரீநிதி படத்தை தமிழக பாஜகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, அதில் ‘தாமரை மலரட்டும்; தமிழகம் வளரட்டும்; வாக்களிப்பீர் தாமரைக்கே’ என்று பதிவிட்டிருந்தது.



    காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்தின் மருகளும், சிவகங்கை காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரத்தின் மனைவியுமான ஸ்ரீநிதி சிதம்பரம் 10ஆண்டுகளுக்கு முன்னர், கருணாநிதி எழுதி, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் வெளியான ‘செம்மொழி’ பாடலுக்கு ஸ்ரீநிதி கார்த்தி சிதம்பரம் பரதநாட்டியம் ஆடிய புகைப்படத்தை அவரது அனுமதியில்லாமல் எடுத்து பாஜக தனது பிரச்சாரத்துக்கு பயன்படுத்தியுள்ளது.



    இந்நிலையில், பாஜக தனது புகைப்படத்தை, பாஜகவின் தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்தியது அபத்தமானது என்று கார்த்தி சிதம்பரத்தின் மனைவி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர், தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தமிழகத்தில் தாமரை என்றும் மலராது’ என்று குறிப்பிட்டுள்ளார். இதேபோல், தமிழக காங்கிரஸ் கட்சியும் பாஜகவின் இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
    Published by:Suresh V
    First published: