ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

கட்சியில் இருந்து நீக்கியது ரூபி மனோகரனுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதி- கார்த்தி சிதம்பரம் ஆவேசம்

கட்சியில் இருந்து நீக்கியது ரூபி மனோகரனுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதி- கார்த்தி சிதம்பரம் ஆவேசம்

ரூபி மனோகரன் - கார்த்தி சிதம்பரம்

ரூபி மனோகரன் - கார்த்தி சிதம்பரம்

காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கியது ரூபி மனோகரனுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதி என கார்த்திக் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் கடந்த 15ம் தேதி நடந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது இரு தரப்பினரிடையே கடும் மோதல் ஏற்பட்டது. அப்போது, மாநில தலைவர் கே.எஸ்.அழகிரியை முற்றுகையிட்ட எம்.எல்.ஏ. ரூபி மனோகரனின் ஆதரவாளர்கள் கடுமையாக தாக்கப்பட்டனர்.

இதையடுத்து மோதல் தொடர்பாக விளக்கமளிக்க ரூபி மனோகரன் மற்றும் ரஞ்சன் குமார் ஆகியோருக்கு கடிதம் அனுப்பப்பட்டது. இந்நிலையில், தவிர்க்க முடியாத சில காரணங்களால் நேரில் வந்து விளக்கம் தர இரண்டு வாரம் அவகாசம் வழங்க வேண்டும் என்று ரூபி மனோகரன் கோரியிருந்தார்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து ரூபி மனோகரன் தற்காலிகமாக நீக்கம் செய்யப்படுவதாக காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி அறிவித்துள்ளார்.இதற்கு காங்கிரஸ் எம்பி கார்த்திக் சிதம்பரம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் நியூஸ் 18க்கு  சிறப்பு பேட்டி அளித்துள்ளார். அதில்,

கேள்வி: ரூபி மனோகரன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து உங்களுடைய கருத்து?

பதில்: ரூபி மனோகரன் மீதான நடவடிக்கை அதிர்ச்சி அளிக்கிறது. அவரது வாதம் மற்றும்  நியாத்தை கேட்காமல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது ஏற்றுக்கொள்ள முடியாதது. இது ஒருதலைபட்சமான நடவடிக்கை. வன்மையாக கண்டிக்கத்தக்கது. இது அவருக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதி.  மேலிடம் இதன்மீது நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன்.

கேள்வி: இரண்டு தரப்பினர் மோதிக்கொண்ட நிலையில், ஒருவர் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறித்து உங்கள் கருத்து?

பதில்: முக்கிய வழக்குகளில் கூட நீதிமன்றம் அவகாசம் கொடுக்கும். உடனடியாக தீர்ப்பு கொடுக்காது. ஆனால் உட்கட்சி விவகாரத்தில் இவ்வளவு அவசரமாக ஏன் முடிவெடுக்க வேண்டும்.ரூபி மனோகரன் கட்சியின் பொருளாளர். மக்களால் தேர்தெடுக்கப்பட்ட பிரதிநிதி. அவரது பதவிகளை சாதாரணமாக எடுத்துக்கொள்ள கூடாது. இது அவசரப்பட்டு, சிலரது வற்புறுத்தலுக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை போல் உள்ளது.

இதையும் படிங்க: மங்களூர் வெடி விபத்து: “ஈஷா மையத்தில் அவனை பார்த்தேன்” ஆட்டோ ஓட்டுநர் சொன்ன அதிர்ச்சி தகவல்

கேள்வி: ஒழுங்கு நடவடிக்கை குழு சரியாக செயல்பட்டுள்ளதா?

பதில்: ஒழுக்கு நடவடிக்கை குழுவிற்கு இந்த அதிகாரம் இருக்கிறதா என்பதே சந்தேகம். அதிகாரம் இல்லை என்றே நினைக்கிறேன். நடுநிலையை பின்பற்றவில்லை. இடைக்கால தீர்ப்பு எல்லாம் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன?

கேள்வி: யாருடைய வற்புறுத்தல் என்று கூறுகிறீர்கள்?

பதில்: இது அனைவரும் அறிந்தது தான். மாநில தலைமை கட்டுக்கோப்பாக இருந்து அரவணைத்து செயல்பட்டிருந்தால் பிரச்சனை வந்திருக்காது. இதற்கு மாநில தலைமை தான் பொறுப்பு

Published by:Arunkumar A
First published:

Tags: Congress, Indian National Congress