ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

கார்த்திகை தீபம்: திருவாரூரில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு

கார்த்திகை தீபம்: திருவாரூரில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு

கார்த்திகை தீபம்

கார்த்திகை தீபம்

karthigai deepam 2022 : கார்த்திகை தீபத்தை முன்னிட்டு தெற்கு ரயில்வே திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் நிற்குமாறு சிறப்பு நிறத்தை அறிவித்துள்ளனர்.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை முன்னிட்டு தமிழக முழுவதிலும் இருந்து பக்தர்கள் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்குத் தரிசிக்கச் செல்லுவர். அப்படிச் செல்பவருக்கு ஏதுவாக டிசம்பர் 6 மற்றும் 7 ஆம் தேதிகளில் திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் ரயில்கள் நிறுத்திச் செல்ல சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளனர்.

திருவாரூர் இருந்து திருவண்ணாமலை சிறப்பு ரயில்:

வண்டி எண்: 06690 மயிலாடுதுறையில் இருந்து விழுப்புரம் செல்லும் சிறப்பு ரயில் டிசம்பர் 6 மற்றும் 7 ஆம் தேதிகளில் திருவாரூரில் இருந்து திருவண்ணாமலை வரை செல்லுமாறு நீடிக்கப்பட்டுள்ளது.

திருவாரூரில் இருந்து காலை 05.00 மணிக்குப் புறப்படும் ரயில் காலை 10.55 மணிக்குத் திருவண்ணாமலையை வந்து அடையும்.

கால அட்டவணை:

 StationTrain No. 06690 Mayiladuturai-Villupuram Special
Tiruvarur(d)05.00
Nannilam(a/d)05.17/05.18
Punthottam Halt(a/d)05.25/05.26
Peralam(a/d)05.32/05.33
Mayiladuturai(a/d)05.55/06.00
Villupuram(a/d)09.05/09.15
Tiruvannamalai(d)10.55

கார்த்திகை தீபம் சிறப்பு நாளன்று திருவண்ணாமலைக்குச் செல்லும் பக்தர்கள் ரயில்வேயின் சிறப்பு ரயில்களைப் பயன்படுத்திக் கொண்டு பயணம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

First published:

Tags: Karthigai Deepam, Special trains, Thiruvannamalai