ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

கார்த்திகை தீபம்: திருச்சியில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு

கார்த்திகை தீபம்: திருச்சியில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு

சிறப்பு ரயில்

சிறப்பு ரயில்

Karthigai deepam 2022 : கார்த்திகை தீபத்தை முன்னிட்டு தெற்கு ரயில்வே திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் நிற்குமாறு சிறப்பு நிறத்தை அறிவித்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை முன்னிட்டு தமிழக முழுவதிலும் இருந்து பக்தர்கள் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்குத் தரிசிக்கச் செல்லுவர். அப்படிச் செல்பவர்களுக்கு ஏதுவாக டிசம்பர் 6 மற்றும் 7 ஆம் தேதிகளில் திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் ரயில்கள் நிறுத்திச் செல்ல சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளனர்.

திருச்சியில் இருந்து வேலூர் செல்லும் சிறப்பு ரயில் :

திருச்சியில் இருந்து வேலூர் செல்லும் சிறப்பு ரயில் திருவண்ணாமலை வழியாகச் செல்லும். அப்போது திருவண்ணாமலை நிலையத்தில் நிற்கும் என்று தெரிவித்துள்ளனர். இந்த ரயில் டிசம்பர் 6 மற்றும் 7 ஆம் தேதிகளில் திருச்சியில் இருந்து காலை 05.40 மணிக்குப் புறப்பட்டு மதியம் 1.10 மணிக்கு வேலூர் சென்றடையும். இதன் நடுவில் கடக்கும் நிலையங்களில் திருவண்ணாமலை இடம்பெற்றுள்ளது. குறிப்பிட்ட நாட்களில் காலை 11.40 மணிக்கு திருவண்ணாமலை ரயில் நிலையத்திற்கு வரும். 10 நிமிடங்கள் நிற்று 11.50  ரயில் புறப்படும்.

அதே போல், வேலூரில் இருந்து திருச்சி செல்லும் சிறப்பு ரயில் வேலூரில் இருந்து டிசம்பர் 6 மற்றும் 7 ஆம் தேதிகளில் இரவு 9.00 மணிக்குப் புறப்பட்டு காலை 5.30 மணிக்குத் திருச்சிக்கு வந்தடையும். இந்த ரயிலும் திருவண்ணாமலையில் இரவு 10.15 மணிக்கு வந்தடைந்து 10.20 மணிக்கு புறப்படும்.

ரயில் கால அட்டவணை:

Tiruchchirappalli-Vellore specialStationVellore –Tiruchchirappalli Special
05.40(d)Tiruchchirappalli(a)05.00
05.59/06.00(a/d)Thiruverumbur(a/d)04.29/04.30
06.15/06.16(a/d)Budalur(a/d)04.18/04.19
06.32/06.35(a/d)Thanjavur(a/d)03.58/04.00
06.55/06.56(a/d)Papanasam(a/d)03.29/03.30
07.08/07.10(a/d)Kumbakonam(a/d)03.13/03.15
08.00/08.02(a/d)Mayiladuthurai(a/d)02.38/02.40
08.31/08.32(a/d)Vaitheeswaran Koil(a/d)02.19/02.20
08.42/08.43(a/d)Sirkazhi(a/d)02.10/02.11
09.08/09.10(a/d)Chidambaram(a/d)01.53/01.55
09.50/09.52(a/d)Tirupadiripuliyur(a/d)01.10/01.12
10.40/10.45(a/d)Villuppuram(a/d)00.20/00.25
11.40/11.50(a/d)Tiruvannamalai(a/d)22.15/22.20
12.14/12.15(a/d)Polur(a/d)21.40/21.45
12.28/12.29(a/d)Arni Road(a/d)21.32/21.33
13.10(a)Vellore(d)21.00

கார்த்திகை தீபம் சிறப்பு நாளன்று திருவண்ணாமலைக்குச் செல்லும் பக்தர்கள் ரயில்வேயின் சிறப்பு ரயில்களைப் பயன்படுத்திக் கொண்டு பயணம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

First published:

Tags: Karthigai Deepam, Special trains, Thiruvannamalai