திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை முன்னிட்டு தமிழக முழுவதிலும் இருந்து பக்தர்கள் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்குத் தரிசிக்கச் செல்லுவர். அப்படிச் செல்பவருக்கு ஏதுவாக டிசம்பர் 6 மற்றும் 7 ஆம் தேதிகளில் திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் ரயில்கள் நிறுத்திச் செல்ல சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளனர்.
மதுரையில் இருந்து விழுப்புரம் செல்லும் ரயில் :
வண்டி எண்: 16868 மதுரை விரைவு சிறப்பு ரயில் மதுரையில் இருந்து விழுப்புரம் செல்லும். தற்போது கார்த்திகை தீபத்தை முன்னிட்டு திருவண்ணாமலை வரை செல்லுவதற்கு ஏதுவாக நேரம் அமைக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 6 மற்றும் 7 ஆம் தேதிகளில் மதுரையில் இருந்து புறப்பட்டு காலை 11.15 மணிக்கு இந்த ரயில் விழுப்புரத்தை வந்தடையும். அங்கிருந்து காலை 11.30 மணிக்குத் திருவண்ணாமலைக்கு ரயில் புறப்பட்டு மதியம் 01.05 மணிக்குத் திருவண்ணாமலையை வந்தடையும்.
அதே போல், டிசம்பர் 6 மற்றும் 7 தேதிகளில் திருவண்ணாமலையில் இருந்து மதியம் 3.00 மணிக்கு இதே ரயில் புறப்பட்டு மதியம் 04.35 மணிக்கு விழுப்புரம் சென்றடையும்.
கால அட்டவணை:
Train No. 16868 Madurai –VillupuramExtended from Villupuram to Tiruvannamalai on 06th and 07th December, 2022 | ↓ | Station | ↑ | Train No.16867 Villupuram - MaduraiExtendedFrom Tiruvannamalai to Villupuramon 06th& 07th December, 2022 |
04.05 | (d) | Madurai | (a) | 23.30 |
11.15 | (a) | Villupuram | (d) | 16.35(16867) |
11.15/11.30 | (a/d) | Villupuram | (a) | 16.25/16.35 |
12.08/12.10 | (a/d) | Tirukkoyilur | (a/d) | 15.28/15.30 |
13.05 | (a) | Tiruvannamalai | (d) | 15.00 |
கார்த்திகை தீபம் சிறப்பு நாளன்று திருவண்ணாமலைக்குச் செல்லும் பக்தர்கள் ரயில்வேயின் சிறப்பு ரயில்களைப் பயன்படுத்திக் கொண்டு பயணம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.