கார்த்திகை மகா தீபத்திருவிழாவை முன்னிட்டு இன்று முதல் சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
சென்னை கடற்கரையிலிருந்து வேலூர் வரை இயக்கப்படும் ரயில், இன்று முதல் நாளை மறுநாள் வரை திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு, திருவண்ணாமலைக்கு நள்ளிரவு 12.05 மணிக்குச் சென்றடையும். அதேபோல மறுமார்க்க நாளை முதல் டிசம்பர் 8ம் தேதி வரை திருவண்ணாமலையில் இருந்து சென்னை கடற்கரை ரயில் நிலையத்துக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
Also Read : டிசம்பர் 7 முதல் கனமழை... 16 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை.. வானிலை மையத்தின் அலெர்ட்!
இந்த ரயில் காலை 9.05 மணிக்கு புறப்பட்டு மாலை 3.45 மணிக்கு சென்னை கடற்கரை ரயில் நிலையத்தை வந்தடையும்.
இதற்கிடையே, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் தீபத்திருவிழாவின் 8ஆம் நாளான நேற்று பிச்சாண்டவர் உற்சவம் நடைபெற்றது. சிறப்பு பூஜைகளுக்கு பிறகு தங்க கவசம் அணிந்து பிச்சாண்டவர் ராஜகோபுரம் அருகே தயாராக இருந்த வெள்ளி வாகனத்தில் எழுந்தருளினார். அதைத்தொடர்ந்து நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அப்போது வியாபாரிகள் பிச்சாண்டவருக்கு காணிக்கை செலுத்தி சாமி தரிசனம் செய்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Karthigai Deepam, Special trains