கல்யாண வீடு, லக்‌ஷ்மி ஸ்டோர்ஸ் எது பாக்குறீங்க? டிவி சீரியலை வைத்து கார்த்தி சிதம்பரம் பிரசாரம்!

கார்த்தி சிதம்பரம்

நாங்கள் வெற்றி பெற்ற உடனே கேபில் கட்டணத்தை 100 ரூபாயாக குறைத்துவிடுவதாகவும் கார்த்தி சிதம்பரம் உத்தரவாதம் அளித்தார்.

 • News18
 • Last Updated :
 • Share this:
  தொலைக்காட்சியில் கல்யாண வீடு, லக்‌ஷ்மி ஸ்டோர்ஸ், இதில் எந்த சீரியல் பாக்குறீங்க என்று டிவி சீரியலை வைத்து பிரசாரம் செய்தார் கார்த்தி சிதம்பரம்.

  தமிழகத்தில் வரும் 18-ம் தேர்தி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தொடர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன்.

  தொடர் பிரசாரத்தினிடையே அரசியல் கட்சியினரிடையே நிகழும் சுவாரஸ்யங்களும் வைரலாகி வருகின்றன.

  இந்நிலையில் சிவகங்கை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் கார்த்தி சிதம்பரம் நேற்று தேவகோட்டையில் திமுக கூட்டணி செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

  அப்போது பேசிய கார்த்தி சிதம்பரம் பொதுமக்களைப் பார்த்து, செம்பருத்தி, கல்யாண வீடு, லக்‌ஷ்மி ஸ்டோர்ல உங்களுக்கு எந்த சீரியல் ரொம்ப பிடிக்கும் என்றும் கேள்வி கேட்டார்.

  அதற்குக் கூட்டத்தில் இருந்த பெண்கள் செம்பருத்தி சீரியல் என்று பதிலளிக்க, எனக்கு பெரிய சந்தேகம் என்ற கார்த்தி, நீங்க எல்லாம் அந்த சீரியல் ஹீரோயின் பார்வதி பக்கமா அல்லது வில்லி வனஜா பக்கமா என்று கேட்க, அதற்குப் பெண்கள், நாங்கள் பார்வதி பக்கம் என்று பதிலளித்தனர்.

  நாள் முழுவதும் வேலை செய்துவிட்டு மாலையில் தொலைக்காட்சி பார்க்கும் பெண்களுக்கு கேபில் கட்டணம் 400 ரூபாய் வரை செலுத்துவது எவ்வளவு சிரமம் என்று எனக்கு தெரியும்.

  அதனால் நாங்கள் வெற்றி பெற்ற உடனே கேபில் கட்டணத்தை 100 ரூபாயாக குறைத்துவிடுவதாகவும் கார்த்தி சிதம்பரம் உத்தரவாதம் அளித்தார்.

  இதற்கு அந்தக் கூட்டத்தில் இருந்த பெண்கள் கைகளைத் தட்டி வரவேற்பு அளித்தனர்.

  Also see...


  தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

  ஐ.பி.எல் தகவல்கள்

  POINTS TABLE:


  ORANGE CAP:


  PURPLE CAP:


  RESULTS TABLE:


  SCHEDULE TIME TABLE:
  Published by:Vinothini Aandisamy
  First published: