’கவர்ச்சியான அறிவிப்புகள்... எல்லாம் மாயை...’ - கார்த்தி சிதம்பரம் விமர்சனம்

நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த பிரதமர் மோடி அறிவித்த ₹ 20 லட்சம் கோடி திட்டம் என்பது ஒரு மாயை என கார்த்தி சிதம்பரம் எம்.பி. தெரிவித்தார்.

’கவர்ச்சியான அறிவிப்புகள்... எல்லாம் மாயை...’ - கார்த்தி சிதம்பரம் விமர்சனம்
கார்த்தி சிதம்பரம்
  • Share this:
சிவகங்கையில் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் சலவைத் தொழிலாளர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது, ”ஊரடங்கு அமல்படுத்துவதற்கு முன்னதாக தொழில்புரிவோர் மற்றும் பொதுமக்களின் வாழ்வாதாரத்திற்கு வழி செய்துவிட்டு ஊரடங்கு அறிவித்திருக்க வேண்டும்.

20 லட்சம் கோடிக்கு திட்டம் வகுத்துள்ளோம் என்று கூறுகிறார்கள். ஏற்கனவே ஒவ்வொரு அக்கவுண்டிலும் பணம் போடுவதாக தெரிவித்திருந்தார், நடந்ததா? அதுபோன்ற மாயை தான் ரூ.20 லட்சம் கோடி திட்டமும்.

பொருளாதாரமே சுருங்கிய நிலையில் இந்தியா இருக்கிறது. முன் யோசனையுடன் மத்திய அரசு பொருளாதாரக் கொள்கைகளை அறிவிக்க வேண்டும். மக்கள் கைகளில் பணத்தை கொண்டு சேர்க்க வேண்டும். அதற்காகதான் காங்கிரஸ் முதலில் ஒவ்வொரு நபருக்கும் ₹ 7000 பின்னர் 10,000 தர வேண்டும் என்று  அறிவித்தது” என்றார்.


மேலும், “மக்கள் ஏற்கனவே கடன் சுமையில் தவித்து வருகின்றனர். அவர்களுக்கு மேலும் கடன் கொடுக்க வேண்டியதில்லை. GST உள்ளிட்ட வரிகளை குறைக்க வேண்டும். இந்த இக்கட்டான சூழ்நிலையில் எவ்வாறு பொருளாதாரத்தை நடத்த வேண்டும் என்பது அவர்களுக்கு தெரியவில்லை.

மானியத்துடன் கூடிய கடன் வழங்க வேண்டும் மத்திய அரசு சொல்வதெல்லாம் கவர்ச்சிகரமாக இருக்குமே தவிர அத்தனையும் மாயை. இது சுமையை அதிகரிக்குமே தவிர குறைக்காது” என்றார்.

மேலும் படிக்க...நூற்றில் ஐந்து பேரை உயிரிழக்கச் செய்யும் கொரோனா - தமிழக முதியவர்களை எச்சரிக்கும் இறப்பு விகித புள்ளி விவரம்

 








First published: June 3, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading