பா.ஜ.கவின் பொம்மலாட்டத்துக்கு ரஜினிகாந்த் செவிசாய்க்கிறார்! கார்த்தி சிதம்பரம் கடும் தாக்கு

கார்த்தி சிதம்பரம்

 • Share this:
  ரஜினிகாந்த் வெளிப்படையாக பா.ஜ.கவில் சேர்ந்துவிடலாம் என்று காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

  சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த் குடியுரிமை திருத்தச் சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு ஆபத்து இல்லை. தேசிய குடிமக்கள் பதிவேடு என்பது முக்கியமான ஒன்று. அரசியல்கட்சிகள் ஆதாயத்துக்காக இஸ்லாமியர்களைத் தூண்டிவிடுகின்றனர்’ என்று தெரிவித்தார். அவருடைய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது.

  இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம், ‘பொம்மலாட்டக்காரர்கள் என்ன எழுதிக் கொடுக்கிறார்களோ அதே ஒப்பித்துள்ளார. இன்னும் ஏன் இந்தப் பித்தலாட்டம் என்று தெரியவில்லை. அவர், வெளிப்படையாக பா.ஜ.கவில் இணைந்து விடலாம். பா.ஜ.கவின் பொம்மலாட்டத்துக்கு செவி சாய்க்கிறார். இனிமேலும், ஏன் தனிக்கட்சி என்று பேசுவதில் அர்த்தம் இல்லை. என்னைப் பொறுத்தவரையில் அவர் வெளிப்படையாக பா.ஜ.கவில் இணைவதுதான் சரியாக இருக்கும்.


  பா.ஜ.க என்பது தமிழ்நாட்டுக்கு, தமிழ் இனத்துக்கு, தமிழர்களுக்கு எதிரானது. இந்த குடியுரிமை திருத்தச் சட்டம் என்பது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு எதிரானது. சரித்திரம் படித்தவர்களுக்கு நன்றாகத் தெரியும். 1935-ம் ஆண்டில் ஹிட்டல் யூதர்களுக்கு எதிராக சட்டத்தைக் கொண்டுவந்து யூத மக்களின் உரிமைகளைப் பறித்தாரோ அதேபோல, மோடி-அமித்ஷா உள்நாட்டு மக்களின் உரிமைகளைப் பறிக்க முயற்சிக்கின்றனர்’ என்று விமர்சனம் செய்துள்ளார்.

  Also see:


   
  Published by:Karthick S
  First published: