உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று முடிந்தது. மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடைபெறும் சட்டமன்றத் தேர்தல் என்பதால் நாடு முழுவதும் மிகப்பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. குறிப்பாக உத்தரப் பிரதேச மாநிலத்தின் தேர்தல் முடிவுகளை நாடு முழுவதும் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸுக்கு இருப்பு இல்லையென்றாலும் சிறிதளவு முன்னேற்றம் காணும் என்று எதிர்பார்க்கப்பட்டது. உத்தரப் பிரதேசத்தைத் தவிர்த்த பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவால் காங்கிரஸ் நன்றாக செயல்படும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எதிர்ப்புகளை ஏமாற்றி அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் தோல்வியைத் தழுவியுள்ளது.
பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சியிடம் ஆட்சியை இழந்துள்ளது. மணிப்பூர், உத்தரகாண்ட், கோவா ஆகிய மாநிலங்களிலும் பா.ஜ.கவிடம் தோல்வியைத் தழுவியுள்ளது. மாறாக, காங்கிரஸ் போட்டியாளரான பா.ஜ.க பஞ்சாப் தவிர்த்து அனைத்து மாநிலங்களிலும் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் 260-க்கும் கூடுதலான தொகுதியில் பா.ஜ.க முன்னிலையில் உள்ளது.
காங்கிரஸ் தொண்டர்கள் பெரும் சோகத்தில் உள்ளனர். ஆம் ஆத்மி, பா.ஜ.கவினர் நாடு முழுவதும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் காங்கிரஸார் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
Any recommendations for what to watch on @netflix now!
— Karti P Chidambaram (@KartiPC) March 10, 2022
இந்தநிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் மூத்த தலைவரும் எம்.பியுமான கார்த்தி சிதம்பரத்தின் ட்விட்டர் பதிவு இணையத்தில் வைரலாகிவருகிறது. தேர்தல் முடிவு வந்துகொண்டிருக்கும் போது அவர், ‘தற்போது நெட்பிளிக்ஸில் என்ன படம் பார்க்க வேண்டும் என்று ஏதாவது பரிந்துரையுங்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார். அவருடைய ட்விட்டில், ‘இன்சைட் ஜாப், த பொலிடிசியன் உள்ளிட்ட படங்களை நெட்டிசன்கள் பரிந்துரை செய்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Election 2022, Karthi chidambaram