நேரம் சரியில்லை... விஷம் குடிக்கப் போகிறேன் - மனைவியிடம் கூறிவிட்டு தற்கொலை செய்த வியாபாரி

தனக்கு நேரம் சரியில்லை என்பதால் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அந்தியூர் அருகே இருக்கும் பர்கூர் ஜோதிடரை பார்க்க பார்த்திபன் வந்துள்ளார்.

news18
Updated: May 21, 2019, 11:14 AM IST
நேரம் சரியில்லை... விஷம் குடிக்கப் போகிறேன் - மனைவியிடம் கூறிவிட்டு தற்கொலை செய்த வியாபாரி
மாதிரி படம்
news18
Updated: May 21, 2019, 11:14 AM IST
கர்நாடகாவைச் சேர்ந்த வியாபாரி, ஈரோடு மாவட்டத்திற்கு ஜோதிடம் பார்க்க வந்து மனைவியிடம் விஷம் குடிக்கப் போவதாக கூறி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

கர்நாடகா மாநிலம் கொள்ளேகாலை சேர்ந்தவர் பார்த்திபன். எலட்க்ரிகல் பொருட்கள் விற்பனை செய்து வரும் இவர், தனக்கு நேரம் சரியில்லை என குடும்பத்தினரிடம் புலம்பி வந்துள்ளார்.

இதற்கிடையே, தனக்கு நேரம் சரியில்லை என்பதால் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அந்தியூர் அருகே இருக்கும் பர்கூர் ஜோதிடரை பார்க்க பார்த்திபன் வந்துள்ளார்.

வரும் வழியில் மனைவியிடம் போனில் பேசிய அவர், தனக்கு இது மோசமான நேரம் என்றும், அதனால் தற்கொலை செய்துகொள்ளப்போவதாக கூறியுள்ளார். வாட்ஸ்-அப்பிலும் உறவினர்கள் சிலருக்கு இதேதகவலை தெரிவித்துள்ளார். பின்னர் செல்போனை ஸ்விட்ச் ஆப் செய்துவிட்டார்.

பார்த்திபனின் செயலால் பதறிப்போன அவரது மனைவி, அந்தியூரில் இருக்கும் தனது உறவினர்களு தகவல் அளித்துள்ளார். உடனே, பர்கூருக்கு உறவினர்கள் விரைந்து வந்து பதிவு எண்ணை வைத்து காரை கண்டறிந்தனர்.

ஆனால், காருக்குள் விஷம் குடித்த நிலையில் பார்த்திபன் மயங்கி கிடந்துள்ளார். உடனே, அவரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். பரிதாபமாக, அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.

First published: May 21, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...