#News18SuperExclusive | மேகதாதுவில் புதிய அணை கட்ட அனுமதி கோரி மத்திய அரசுக்கு கர்நாடக அரசு கடிதம்

கடிதத்தில் குடிநீர் தேவைக்காகவும், வறட்சியை சமாளிக்கவும் அணை அவசியம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

news18
Updated: June 24, 2019, 11:53 AM IST
#News18SuperExclusive | மேகதாதுவில் புதிய அணை கட்ட அனுமதி கோரி மத்திய அரசுக்கு கர்நாடக அரசு கடிதம்
கடிதம் மற்றும் வரைபடம்
news18
Updated: June 24, 2019, 11:53 AM IST
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்டக்கோரி, அணையின் வரைபடத்துடன் கர்நாடக அரசு மத்திய அரசுக்கு அனுமதி கோரி கடிதம் எழுதியுள்ளது.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு நீண்ட காலமாக முயன்று வருகிறது. இதனை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், புதிய அணைக்கான வரைபடத்துடன் கர்நாடக அரசு, அணை கட்ட சுற்றுச்சூழல் அனுமதி கோரி, மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.

கடிதத்தின் நகல்


கடிதத்தின் நகல்


அணையின் கட்டிட வரைபடம்


அணையின் கட்டிட வரைபடம்


நான்கு நாட்களுக்கு முன்னர் அனுப்பப்பட்ட இந்த கடிதம் நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு கிடைத்துள்ளது. இந்த கடிதத்தில் குடிநீர் தேவைக்காகவும், வறட்சியை சமாளிக்கவும் அணை அவசியம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாயில் அணை கட்ட மதிப்பிடப்பட்டுள்ளதாகவும், புதிய அணையினால் 5 கிராமங்கள் மூழ்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூழ்கும் கிராமங்களில் உள்ளவர்களுக்கு மாற்று இடங்கள் வழங்கப்பட்டு அப்புறப்படுத்தப்படுவார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
First published: June 24, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...