இந்து கோவில்களை மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க விரைவில் சட்டம் கொண்டுவரப்படும் என கர்நாடக மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
கர்நாடக அரசு சமீபத்தில் அதிரடியாக கட்டாய மதமாற்ற தடைச் சட்டத்தினை (Protection of Right to Freedom of Religion Bill, 2021) சட்டப்பேரவையில் நிறைவேற்றியது. மேல்சபையின் ஒப்புதலை பெற்று விரைவில் இந்த சட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, இந்து கோவில்களை மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கும் வகையில் புதிய சட்டத்தை விரைவில் நிறைவேற்ற இருப்பதாக அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை அடுத்த அதிரடி நடவடிக்கையை கையில் எடுத்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தின் ஹூப்ளி நகரில் இரண்டு நாட்களாக பாஜக செயற்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொண்ட முதல்வர் பசவராஜ் பொம்மை பேசுகையில், “தற்போது, கர்நாடக மாநிலத்தில் உள்ள இந்து கோவில்கள் பல்வேறு வகையான கட்டுப்பாடுகள் மற்றும் விதிகளின் கீழ் உள்ளன. அதிகாரத்தின் கட்டுப்பாட்டில் தவித்து வரும் கோவில்களை இனி அரசு சுதந்திரமாக செயல்பட வைக்கப்போகிறது.
Also read: ராகுல் காந்தி மீண்டும் வெளிநாட்டு பயணம்..
அதன்படி, கோவில் நிர்வாகங்களே இனி கோவில் மேம்பாட்டு பணிகளை கவனித்துக்கொள்ளும் உரிமையை புதிய சட்டம் மூலம் கர்நாடக அரசு வழங்கும்.
கோவில்களை மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கும் வகையிலான சட்ட மசோதா அடுத்த சட்டமன்ற கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும். இந்த வரலாற்று சிறப்புமிக்க நடவடிக்கை மூத்த தலைவர்களின் ஆலோசனைக்கு பின்னர் மேற்கொள்ளப்படும். பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்பாகவே இந்த சட்டமசோதா தாக்கல் செய்யப்படும். இதன் மூலம் எவ்வித கட்டுப்பாடுகளுக்கும் ஆளாகாமல் கோவில்கள் சுதந்திரமாக இயங்கும் என பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.
Also read: செல்பி எடுக்க முயன்ற காங்கிரஸ் தொண்டர்.. செல்போனை தட்டிவிட்டு திட்டித்தீர்த்த டி.கே.சிவக்குமார்..
கர்நாடக அரசு கொண்டு வரும் கட்டாய மதமாற்ற தடை சட்டத்தினை நாங்கள் ஆட்சிக்கு வந்த பின்னர் நீக்குவோம் என காங்கிரஸ் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் சித்தராமையா கூறியது குறித்து பேசிய பசவராஜ் பொம்மை, அவர்களின் கனவு என்றும் பலிக்காது. அடுத்த தேர்தலில் அவர்கள் வெற்றி பெற மாட்டார்கள். அந்த சட்டம் சூரியன், சந்திரன் போல நிரந்தரமாக இருக்கும் என கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.