ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

மேகதாது அணை கட்டும் திட்டத்தை கர்நாடக அரசு கைவிட வேண்டும்: எடியூரப்பாவுக்கு முதல்வர் ஸ்டாலின் பதில் கடிதம்

மேகதாது அணை கட்டும் திட்டத்தை கர்நாடக அரசு கைவிட வேண்டும்: எடியூரப்பாவுக்கு முதல்வர் ஸ்டாலின் பதில் கடிதம்

4.75 டி.எம்.சி தண்ணீர் தேவைக்காக கர்நாடக அரசு 67.16 டி.எம்.சி கொள்ளளவுள்ள அணையை மேகதாதுவில் கட்ட முயல்வதை ஏற்றுக்கொள்ளவே முடியாது.

 • 1 minute read
 • Last Updated :

  மேகதாது அணை கட்டும் திட்டத்தை கர்நாடக அரசு கைவிட வேண்டும் என கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் கடிதம் எழுதியுள்ளார்.

  கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பா, நேற்றைய தினம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மேகதாது அணை தொடர்பாக கடிதம் எழுதியிருந்தார். அதில், மேகதாது அணை கட்டுவது தமிழகத்தை எந்தவிதத்திலும் பாதிக்காது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  அதனால், இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டாம். மேகதாது திட்டத்தால் விவசாயிகளுக்கு பாதிப்பில்லை என்பதால் ஒத்துழைப்பு அளிக்கும்படியும் குறிப்பிட்டிருந்தார். மேலும், பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு மேகதாது திட்டத்திற்கு தமிழகம் எதிர்ப்பு தெரிவிக்கது என நம்புகிறோம் என்றும் தெரிவித்திருந்தார்.

  இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், எடியூரப்பாவுக்கு எழுதிய பதில் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, மேகதாது அணை கட்டும் திட்டத்தை கர்நாடக அரசு கைவிட வேண்டும். 4.75 டி.எம்.சி தண்ணீர் தேவைக்காக கர்நாடக அரசு 67.16 டி.எம்.சி கொள்ளளவுள்ள அணையை மேகதாதுவில் கட்ட முயல்வதை ஏற்றுக்கொள்ளவே முடியாது.

  Also read: மதுரையில் நேற்று கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட இளைஞர் மரணம்; இறப்பிற்கான காரணம் குறித்து விசாரணை!

  பெங்களூரு குடிநீர் தேவைக்காக என கூறப்படும் நிலையில் வெகுதொலைவில் அணை கட்டப்பட உள்ளது. எனவே, பெங்களூரு குடிநீர் தேவைக்காக அணைக்கட்டுவதாக கூறும் கருத்தை ஏற்க முடியாது. மேகதாது அணைக் கட்டுவதால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தாது என்ற கருத்தை ஏற்க இயலாது.

  குடிநீருக்காக ஏற்கனவே போதிய கட்டமைப்புகள் உள்ள நிலையில் இத்திட்டத்தை ஏற்க இயலாது. தமிழகம் - கர்நாடகா இடையே நல்லுறவு தழைக்க ஒத்துழைப்பு அளித்திட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

  First published: