ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் இருந்தால் மட்டும் அனுமதி.. எல்லைகளை மீண்டும் மூடியது கர்நாடக அரசு..

கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் இருந்தால் மட்டும் அனுமதி.. எல்லைகளை மீண்டும் மூடியது கர்நாடக அரசு..

கோப்புப்படம்

கோப்புப்படம்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

கேரள மாநிலத்தில் அதிகரித்துவரும் கொரோனா வைரஸ் பரவலால், மங்களூரு உள்ளிட்ட கர்நாடக எல்லைக்குள் வரும் கேரளப் பயணிகளுக்குக் கடும் கட்டுப்பாடுகளைக் கர்நாடக அரசு விதித்துள்ளது. கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் மங்களூரு சாலையில் நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருக்கின்றன.

தட்சின கன்னடா - கேரளா எல்லை வழிச்சாலையும் இன்று காலை முதல் மூடப்பட்டது. 72 மணி நேரத்துக்கு முன் கொரோனா பரிசோதனை செய்த நெகட்டிவ் சான்றிதழ் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என கர்நாடக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

"கொரோனா வைரஸ் பரவல் கேரளாவில் அதிகரித்து வருவதால், மாநிலத்தில் நுழையும் கேரள வாகனங்களுக்குக் கட்டுப்பாடுகள். 72 மணிநேரத்துக்கு முன் கொரோனா பரிசோதனை செய்து நெகட்டிவ் சான்று இருந்தால்தான் அனுமதிக்கப்படுவர். இன்று காலை முதல் மைசூரின் தாளப்பாடி சாலை, பந்த்வால் சாரத்கா சாலை, புத்தூர் தாலுக்காவில் உள்ள நெட்டான்கே-முத்னூர் சாலை, சுலையாவில் உள்ள ஜல்சூர் சாலை ஆகியவை மூடப்பட்டுள்ளன நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்கும் பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள்" என அதிகாரிகள் தெரிவித்துதனர்.

காசர்கோடு பகுதி மக்கள் சிறப்பு மருத்துவ சிகிச்சைக்கும் உயர்ந்த தரத்திலான மருத்துவமனைகளுக்கும் மங்களூருக்குத்தான் சென்று வருகிறார்கள். ஆபத்தான நிலையில் நோயாளிகள் மருத்துவ சிகிச்சைக்கு செல்ல வேண்டுமென்றால்கூட, கரோனா நெகட்டிவ் சான்றிதழ் அவசியமாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Karnataka, Kerala, Mangalore