கர்நாடகாவில் இருந்து மேல்மருவத்தூர்ஆதிபராசக்தி கோவிலுக்கு வந்த சென்ற 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து ஆதிபராசக்தி கோவிலில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல்மருவத்தூரில் ஆதிபராசக்தி கோவில் அமைந்துள்ளது. இங்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது உண்டு. பண்டிகை நாட்களில் கோவிலுக்கு அதிகளவில் பக்தர்கள் வருவார்கள் என்பதால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
பக்தர்கள் அனைவரும் முககவசம் அணிய வேண்டும். கோவில் வளாகத்தில் ஒவ்வொரு 1 மணி நேரத்திற்கு ஒருமுறை கிருமி நாசினி தெளிக்க வேண்டும் என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், கட்டுப்பாட்டு நடவடிக்கைகளையும் மீறி மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு கர்நாடகாவில் இருந்து வந்த பக்தர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
கர்நாடகாவின் மாண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கபட்டினம் பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் 3 பேருந்துகளில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு அண்மையில் வந்துள்ளனர். பின்னர் கர்நாடகாவுக்கு திரும்பியுள்ளனர். 2 பேருந்துகளில் திரும்பியவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
இதையும் படிங்க: பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை உட்பட 415 பேர் மீது வழக்குப்பதிவு
இதில், 35 பக்தர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதியானது. இதனை அம்மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அவர்கள் தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு அளித்த தகவலின்பேரில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் படிங்க: தமிழகத்தில் நாளை முதல் கூடுதல் கட்டுப்பாடுகள்... புதிய அறிவிப்பு வெளியாகிறது
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.