சிதம்பரம் சும்மா இருக்க, அழகிரி ஏன் முந்திரி கொட்டையாக முந்திக்கொண்டு விமர்சிக்கிறார்? கராத்தே தியாகராஜன் கடும் விமர்சனம்

வைகோ காங்கிரஸ் இடையே நடக்கும் பிரச்சனை குறித்து மு.க.ஸ்டாலின் இதுவரை ஏன் வாய்திறக்கவில்லை. என்னைப் பொருத்தவரை இந்த விவகாரத்தில் மு.க.ஸ்டாலினின் குரலாகத்தான் வைகோ பேசுகிறார். 

news18
Updated: August 13, 2019, 3:50 PM IST
சிதம்பரம் சும்மா இருக்க, அழகிரி ஏன் முந்திரி கொட்டையாக முந்திக்கொண்டு விமர்சிக்கிறார்? கராத்தே தியாகராஜன் கடும் விமர்சனம்
கராத்தே தியாகராஜன்
news18
Updated: August 13, 2019, 3:50 PM IST
காஷ்மீர் விவகாரம் குறித்து பேசிய ரஜினியை ஏன் ப.சிதம்பரமும், மு.க.ஸ்டாலினும் விமர்சனம் செய்யவில்லை என்று கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்புவாரா என்று கராத்தே தியாகராஜன் கேட்டுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் தலைமைக்கு எதிராக செயல்படுகிறார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் கராத்தே தியாகராஜன் அக்கட்சியிலிருந்து சில மாதங்களுக்கு முன்னர் நீக்கப்பட்டார்.

இந்தநிலையில், நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு அவர் அளித்த சிறப்பு பேட்டியில், ‘ரஜினியை மகாபாரதம் படிக்கச் சொல்லும் கே.எஸ்.அழகிரி முதலில் தனக்கு தலைவர் பதவி வாங்கி கொடுத்த ப.சிதம்பரமும், கூட்டணி கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினும் ஏன் இந்த விவகாரத்தில் வாய் திறக்காமல் இருக்கிறார்கள் என கேட்பாரா?

ரஜினி பேசிய அன்று மாலையே சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற கூட்டத்தில் ப.சிதம்பரம் ஏன் அது பற்றி பேசவில்லை? ஏனென்றால் அவர் ரஜினியை பற்றி பேசமாட்டார். எனக்கு நன்றாகத் தெரியும். இரண்டு பேருக்குள்ளும் புரிதல் இருக்கிறது.

ப.சிதம்பரமும், மு.க.ஸ்டாலினும் இதுபற்றி கருத்து தெரிவிக்காத நிலையில் கே.எஸ்.அழகிரி எதற்காக முந்திரி கொட்டையாக முந்திக்கொண்டு விமர்சிக்கிறார்.? காஷ்மீர் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியிலேயே இரட்டை நிலைப்பாடுகள் உள்ளன. இதெல்லாம் கே.எஸ்.அழகிரிக்கு தெரியாதா?

1996-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட கே.எஸ்.அழகிரி சைக்கிள் சின்னத்திற்கு வாக்கு கேட்கும்போது இது அண்ணாமலை சைக்கிள், சூப்பர் ஸ்டாரின் சின்னம் என்று கேட்டுத்தானே தனக்கு வாக்கு சேகரித்தார். இப்படியெல்லாம் ஏன் மாற்றி மாற்றி பேச வேண்டும்.

என்.ஐ.ஏ. மசோதாவை தி.மு.க ஆதரித்தது என்பது மு.க.ஸ்டாலின் தமிழக பா.ஜ.கவை எதிர்க்கிறார். ஆனால் மோடி, அமித்ஷாவிற்கு ஆதரவாக இருக்கிறார் என்பதைக் காட்டுகிறது. டி.ஆர்.பாலு, நாடாளுமன்றத்தில் பா.ஜ.கவினரை இனிமையான எதிரிகள் என்கிறார். எதிரி என்றால் எதிரிதானே.

வைகோ காங்கிரஸ் இடையே நடக்கும் பிரச்சனை குறித்து மு.க.ஸ்டாலின் இதுவரை ஏன் வாய்திறக்கவில்லை. என்னைப் பொருத்தவரை இந்த விவகாரத்தில் மு.க.ஸ்டாலினின் குரலாகத்தான் வைகோ பேசுகிறார். இன்னும் இரண்டு மூன்று மாதங்களில் கே.எஸ்.அழகிரி தலைவர் பொறுப்பிலிருந்து மாற்றப்படுவார்.

அடுத்த வருடம் மார்ச், ஏப்ரலில் ரஜினிகாந்த் கட்சி தொடங்கும் போது நிச்சயமாக மிகப்பெரிய சக்தியாக உருவெடுப்பார்.  தமிழகத்தில் கருணாநிதி ஜெயலலிதா இல்லாத வெற்றிடத்தை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்’ என்று தெரிவித்தார்.

Also see:

First published: August 13, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...