ரூ.3 லட்சம் ரேஸ் பைக்கிற்காக வழிப்பறிப்பில் ஈடுபட்டு அதே பைக்கால் வசமாக போலீசிடம் சிக்கிய இளைஞர்

பைக்

காரைக்குடியில் ரேஸ் பைக்கிற்காக சங்கிலிப்பறிப்பில் ஈடுபட்ட இளைஞர் ஒருவர் போலீசாரிடம் சிக்கியுள்ளார்.

 • Share this:
  சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மானகிரியைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர் நல்லம்மை (35). இவர் நேற்று மோட்டார் சைக்கிளில் காரைக்குடிக்குச் செல்லும் போது பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர் அவரது கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தாலிச் சங்கிலியை பறித்து சென்றார்.

  இச்சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் டிஎஸ்பி அருண் மற்றும் குன்றக்குடி போலீசார் கோவிலூர் செக்போஸ்ட் சிசிடிவி கேமராவை ஆய்வு செய்ததில் Yamaha KTM 390 CC ரேஸ் பைக்கில் சென்ற இளைஞர் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து ரேஸ் பைக் விற்பனை செய்த டீலரிடம் போலீசார் விசாரித்தில் சென்ற மாதத்தில் ஒரு பைக் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளது வாங்கியவர் காரைக்குடி அருகே உள்ள கொரட்டி புதுவளவைச் சேர்ந்த கலைதாஸ் (25) என்பது தெரியவந்தது.  இதையடுத்து வழிப்பறி செய்த 24 மணி நேரத்திற்குள் பிடித்து போலீசார் இளைஞரிடம் இருந்து வழிப்பறி செய்த தங்க செயினை மீட்டனர். மேலும் விசாரணையில் ஸ்பிளண்டர் வாகனத்தில் ஏற்கனவே செயின்பறியில் ஈடுபட்டு அதனை விற்று தனது ஆசையான விலை உயர்ந்த ரேஸ் பைக்கை வாங்கியுள்ளார்.

  அதன் மதிப்பு ரூ.3 லட்சம் என்பதால்,  பைக்கை தவணையில் வாங்கியுள்ளார். மேலும் வண்டிக்கு கடன் தொகையை செலுத்த வழிப்பறியில் ஈடுபட்டுள்ளான் என்பது தெரிய வந்துள்ளது.
  Published by:Sankaravadivoo G
  First published: