முகப்பு /செய்தி /தமிழ்நாடு / நாணய பெருமையை உணர்த்த செல்லாத காசுகளுக்கு அரைபிளேட் பிரியாணி... ஹோட்டல் முன் அலைமோதிய கூட்டம்

நாணய பெருமையை உணர்த்த செல்லாத காசுகளுக்கு அரைபிளேட் பிரியாணி... ஹோட்டல் முன் அலைமோதிய கூட்டம்

பெண்கள் ,ஆண்கள் என ஏராளமானோர் வருகை தந்து நீண்ட வரிசையில் நின்றதால் தொடர்ந்து செல்லா காசுடன் வந்த அனைவருக்கும் பிரியாணி தயாரித்து வழங்கினர் .

  • Last Updated :

காரைக்குடியில் நாணய பெருமையை உணர்த்த செல்லா காசுகளுக்கு அரைபிளேட் பிரியாணி வழங்கபடும் என்று அறிவிப்பால் ஹோட்டல் முன் கூட்டம் அலைமோதியது.

மதிப்புமாறாமல் இருக்கும் நாணய பெருமையை அனைவரும் உணரும் வகையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி புதிய பேருந்து நிலையம் பின்புறம் உள்ள சில்வர் ஸ்பூன் என்ற உணவகத்தில் செல்லரித்து போன செல்லாத காசுகளுக்கு ரூ.100 மதிப்புள்ள அரைபிளேட் சிக்கன் பிரியாணி வழங்கப்படும் என சமூக வளைதளங்களில் அறிவித்திருந்தனர். மேலும் முதலில் வரும் 200 பேருக்கு மட்டும் வழங்கப்படும் என்றும் அறிவித்திருந்தனர். ஆனால் எதிர்பார்த்ததை விட தொடர்ந்து பெண்கள் ,ஆண்கள் என ஏராளமானோர் வருகை தந்து நீண்ட வரிசையில் நின்றதால் தொடர்ந்து செல்லா காசுடன் வந்த அனைவருக்கும் பிரியாணி தயாரித்து வழங்கினர் .

top videos

    இது தொடர்பாக உணவக உரிமையாளர் கணேஷ் பாண்டி கூறும் போது, சிவில் இன்ஜினியர் படிப்பு முடித்த எனக்கு சமையல் கலையில் ஆர்வம் இருந்ததால் சொந்தமாக ஹோட்டல் ஆரம்பித்தேன். ஒரு வருடம் நிறைவு கொண்டாடும் வகையில் புதுமையாக ஏதாவது செய்ய வேண்டும். என யோசித்து நாணய பெருமையை மக்களுக்கு உணர்த்த ஒரு பைசா முதல் பழைய செல்லாத காசுகளுக்கு பிரியாணி வழங்கலாம் என முடிவு செய்து இனைய தள வாயிலாக விளம்பரம் செய்தோம் காரைக்குடி மக்கள் செல்லாத காசுகளை தேடிப்பிடித்து எடுத்து வந்து கொடுத்த அனைவருக்கும் பிரியாணி வழங்கியதில் மகிழ்ச்சி என்றார்.

    First published:

    Tags: Briyani, Karaikudi