முகப்பு /செய்தி /தமிழ்நாடு / வீல் சேரில் வாழ்க்கை... இரண்டு மகள்கள்... மன உறுதி - எதிர்பார்ப்புடன் முன்னேறும் சதீஷ் குமார்!

வீல் சேரில் வாழ்க்கை... இரண்டு மகள்கள்... மன உறுதி - எதிர்பார்ப்புடன் முன்னேறும் சதீஷ் குமார்!

சதீஷ் குமார்

சதீஷ் குமார்

அரசு மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் உதவி கிடைக்குமா என்ற எதிர் பார்ப்புடன் இருக்கிறார் சதீஷ் குமார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட விபத்தில் எழுந்து நடக்க முடியாமல் வீல் சேரில் அமர்ந்தவாறு இரண்டு பசு மாடுகளை வைத்து மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகளின் பட்டினி போக்க போராடி வருகிறார் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த சதீஷ் குமார்.

மகள்களின் உயர் கல்வி மற்றும் திருமணத்துக்கு அரசு மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் உதவிக்கரம் கிடைக்குமா என்ற எதிர் பார்ப்புடன் சதீஷ் குமார் மற்றும் அவரது குடும்பம் உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் இடைக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ் குமார். இவருக்கு வயது 42. மனைவி சுதா மற்றும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு படித்து வரும் சௌமியா, ரம்மியா ஆகிய இரண்டு மகள்களுடன் இவர், இலவச வீட்டு திட்டத்தில் அரசு வழங்கிய சிறு வீட்டில் வசித்து வருகிறார்.

இவருக்கு 16 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட இருசக்கர வாகன விபத்தில் ஒரு கண்ணை இழந்து ஒரு கண்ணுடன் வாழ்க்கை போராட்டத்தை எதிர் கொண்ட இவர், ஒரு முந்திரி ஆலையில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், சதீஷ் குமார் 8 ஆண்டுகளுக்கு முன்பு ஏணி மூலம் பலா மரம் ஒன்றில் ஏறும்போது, தலை சுற்றி கீழே விழுந்தார்.

இந்த விபத்தில், பல மருத்துவமனைகளில் சிகிச்சை தேடியும் இடுப்புக்கு கீழே தளர்வு ஏற்பட்டு எழுந்து நடக்க முடியாமல் படுக்கையிலே தள்ளப்பட்டார். மனைவி மற்றும் இரண்டு பெண் மகள்களுக்கு பசி போக்கவும் படிக்க வைக்கவும் அடுத்தடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் இயற்கை உபாதைகள் கூட படுக்கையிலே கழிக்க வேண்டி இருந்தது.

குடும்பத்தினருடன் சதீஷ் குமார்

இவ்வாறு, பெரும் துயரத்தில் தள்ளப்பட்ட சதீஷ் குமார் ஊர் மக்கள் உதவியுடன் பேட்டரியில் இயங்கும் ஒரு வீல் சேர் கேட்டு அரசு அதிகாரிகளுக்கு கடிதம் எழுதினார். அதன் படி மாவட்ட நிர்வாகம் சார்பில் சதீஷ் குமாருக்கு வீல்சேர் வழங்கப்பட்டது.

அடுத்த கட்டமாக அன்றாட வாழ்வில் தனது குடும்பத்தின் பசியைப் போக்க என்ன செய்வது என்று யோசித்த இவர், சுய உதவி குழு மூலம் லோன் வாங்கி இரண்டு பசு மாடுகள் வாங்கி, அது மூலம் பட்டினி போக்க வழி தேடினார். இவருக்கு எப்போதும் மற்றொருவரின் உதவி தேவைபோடும் என்பதால் இவரது மனைவிக்கு வேறு வேலை தேடி முடியாத நிலை ஏற்பட்டது.

இரண்டு பசு மாடுகளில் இருந்து பால் விற்று கிடைக்கும் ஒரே வருமானத்தில் பட்டினி போக்கி வருகின்றனர் இந்த குடும்பத்தினர். வீல் சேரில் பல இடங்களில் தோட்டங்களில் மாடுகளை புல் மேய்வதற்கும், மாடுகளுக்கு புற்கள் பறிப்பதற்கும் செல்லும், இவரின் மன உறுதிமிக்க வாழ்க்கை போராட்டம் பலருக்கும் ஒரு எடுத்து காட்டாக அமைந்துள்ளது.

Must Read : ஜாதி மறுப்பு திருமணம்... பெற்றோர்கள் மிரட்டுவதால் பாதுகாப்பு கோரி புதுமண பெண் புகார்

இவர் தற்போது, மூன்று சக்கர வாகனம் ஒன்றை வங்கியுள்ள நிலையில், இவரது வீட்டிற்குச் செல்லும் வழி ஆக்கிரமிப்புகள் காரணமாக குறுகிய பாதை என்பதால் வீட்டுக்கு வாகனம் கொண்ட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றார். இதனால் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற இவர் குழித்துறை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து 3 ஆண்டுகள் ஆகியும் இந்த வழக்கின் மீது இன்னும் தீர்ப்பு வரவில்லை என்று வேதனையும் தெரிவித்துள்ளார்.

சதீஷ் குமார்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தற்போது இரு மகள்களின் உயர் கல்விக்கும் திருமணம் செய்து கொடுக்கவும் வழி இன்றி வீல் சேரில் பட்டினி போக்க போராடும் சதீஷ் குமார் மற்றும் அவரது குடும்பம் தமிழக அரசு அல்லது தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உதவி கரம் நீட்டுமா என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

செய்தியாளர் - சஜ்ஜய குமார், கன்னியாகுமரி.

First published:

Tags: Kanyakumari, Poverty