நடிகர் விஜய் படக் காட்சியுடன் காவலன் செயலிக்கு மீம்ஸ்... குமரி காவல்துறை அசத்தல்...!

நடிகர் விஜய் படக் காட்சியுடன் காவலன் செயலிக்கு மீம்ஸ்... குமரி காவல்துறை அசத்தல்...!
மீம்ஸ்
  • News18
  • Last Updated: February 13, 2020, 4:52 PM IST
  • Share this:
காவலன் செயலியை பிரபலப்படுத்தும் வகையில் கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையினர் நடிகர் விஜய் நடித்த திரைப்பட காட்சிகளை மீம்ஸ்களாக மாற்றி இணையத்தில் பரப்பி வருகின்றனர்.

தமிழக காவல்துறை சார்பில் பெண்கள் மற்றும் முதியோர் பாதுகாகாப்பிற்காக அறிமுகப்படுத்தப்பட்ட காவலன் செயலியை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக பல்வேறு யுக்திகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.


அதன் ஒருபகுதியாக கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையினர் "துள்ளாத மனமும் துள்ளும்" படத்தில் பார்வைத்திறனற்றவராக வரும் சிம்ரனின் பாதுகாப்பு குறித்து நடிகர் விஜய் கவலைப்படுவது போன்ற காட்சியை அடிப்படையாக வைத்து காவலன் செயலிக்காக மீம்ஸ்களை வெளியிட்டு பரப்பி வருகின்றனர்.இதேபோன்று சர்க்கார் படத்தில் வரும் காட்சியை மீம்ஸ்களாக மாற்றி காவல்துறையின் முகநூல் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.இந்நிலையில் இந்த மீம்ஸ்கள் குறித்து செய்தி வெளியிட்ட நியூஸ் 18 தமிழ்நாடு சேனலுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக வீடியோவை ட்விட்டரில் கன்னியாகுமரி காவல் துறையினர் பதிவிட்டுள்ளனர்.

Also see...
First published: February 13, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்