சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கில் கைதான இருவருக்கு ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு!

தவ்பிக், அப்துல் சமீம் ஆகியோர் ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு இருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கில் கைதான இருவருக்கு ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு!
கொல்லப்பட்ட வில்சன் | குற்றவாளிகள் தவுபீக் , ஷமீம்
  • Share this:
சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கில் கைதான இருவருக்கும் ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளதாக, தனிப்படை போலீசார் தெரிவித்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை சோதனைச் சாவடியில் கடந்த 8ம் தேதி பணியில் இருந்த காவலர் வில்சனை கொன்றுவிட்டு தவ்பிக், அப்துல் சமீம் ஆகிய இருவரும் தப்பினர். அதன்பின்னர் கர்நாடக மாநிலம் உடுப்பி ரயில் நிலையத்தில் கைது செய்யப்பட்ட இருவரையும், தக்கலை காவல்நிலையத்தில் வைத்து தனிப்படை போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தவ்பிக், அப்துல் சமீம் ஆகியோர் அல் உம்மா மற்றும் தமிழ்நாடு நேஷனல் லீக் அமைப்புகளை சேர்ந்தவர்கள் என்றும், இவர்களுக்கு ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு இருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளதாக, தனிப்படை போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.


தங்களது அமைப்பை சேர்ந்த பலரை காவல்துறை தொடர்ந்து கைது செய்வதால் அதற்கு எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக வில்சனை சுட்டுக்கொன்றதாக இருவரும் வாக்குமூலம் அளித்துள்ளதாக, தனிப்படை தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது. தவ்பீக், சமீம் கைதை தொடர்ந்து இரண்டு அமைப்புகளையும் சேர்ந்த 17 பேர் தமிழகம் மற்றும் கேரளாவில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

 
First published: January 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading