பாரத மாதா, மோடி குறித்த அவதூறு பேச்சு: தலைமறைவாக இருந்த பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா அதிரடி கைது!

பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா

தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார், அதில் தனது பேச்சு எடிட் செய்யப்பட்டிருப்பதாகவும், பிற மதத்தினர் புண்படும்படி பேசியிருந்தால் அதற்காக மன்னிப்பு கோருவதாகவும் தெரிவித்திருந்தார்.

 • Share this:
  கன்னியாகுமரி பனைவிளை பங்குத் தந்தையான பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா, பாரத மாதா, பிரதமர் மோடி, திமுகவினரை இழிவுபடுத்தும் விதமாக பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகிய நிலையில் தலைமறைவாக இருந்து வந்த பாதிரியாரை விருதுநகர் மாவட்டத்தில் தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

  கன்னியாகுமரி மாவட்டம் அருமனை பகுதியில் கடந்த ஜுலை 18ம் தேதி கிறிஸ்துவ, இஸ்லாமிய அமைப்புகள் இணைந்து நடத்திய சிறுபான்மையினர் உரிமை மீட்பு போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் கலந்து கொண்ட ஜனநாயக கிறிஸ்துவ பேரவையின் ஆலோசகர் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசியதாக கூறப்படுகிறது.

  இது தொடர்பான ஆடியோ கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் பரவியது. அந்த வீடியோவில் பேசும் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா, சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுகவுக்கு கிடைத்த வெற்றி சிறுபான்மையினர் போட்ட பிச்சை என்று பேசியிருந்தார்.

  Also Read:  மணமேடையில் மாப்பிள்ளை செய்த செயலால்... நெட்டிசன்கள் கொந்தளிப்பு

  மேலும் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவின் பேச்சு, பாரத மாதா, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, நாகர்கோவில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர் காந்தி போன்றோரையும் இழிவுபடுத்துவதாக இருந்ததால் இந்த வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியது.

  இதன் காரணமாக மத மோதலை தூண்டும் விதமாக பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா பேசியிருப்பதாக அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜகவினரும், இந்து அமைப்புகளும் காவல்நிலையங்களில் புகார்களை கொடுத்தனர்.

  Also Read:   பாகிஸ்தானுடன் சேரலாம் இல்லனா தனி நாடாகலாம்: காஷ்மீர் மக்களுக்கு இம்ரான் கானின் புதிய ஆஃபர்!

  இதனையடுத்து தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார், அதில் தனது பேச்சு எடிட் செய்யப்பட்டிருப்பதாகவும், பிற மதத்தினர் புண்படும்படி பேசியிருந்தால் அதற்காக மன்னிப்பு கோருவதாகவும் தெரிவித்திருந்தார்.

  இதனிடையே, சர்சைக்குரிய பேச்சு காரணமாக ஜார்ஜ் பொன்னையா மீது 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யபட்டது. இதன் காரணமாக பனைவிளை பங்கு தந்தை ஜார்ஜ் பொன்னையா தலைமறைவாகினார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  அவரது பங்குதந்தை இல்லத்தில் போலீஸ் குவிக்கப்பட்டது. மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரான பத்திரி நாராயணன் தலைமையிலான 6 தனிப்படை போலீசார் அவரை தீவிரமாக தேடிவந்த நிலையில் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவை விருதுநகர் மாவட்டம் கள்ளிக்குடியில் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்..
  Published by:Arun
  First published: