• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • நள்ளிரவு நிர்வாண சைக்கோ கொலைகாரர் கைது

நள்ளிரவு நிர்வாண சைக்கோ கொலைகாரர் கைது

நிர்வாண சைக்கோ கொலைகாரர்

நிர்வாண சைக்கோ கொலைகாரர்

சிசிடிவி காமிரா பதிவுகளில் உள்ள உருவம் ஒத்துபோவதாக தெரிவித்த போலீசார், தேவாலய காவலாளியை கொலை செய்தவர் என்ற முடிவுக்கு வந்த போலீசார் அவரை கைது செய்தனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியை அலறவிட்ட, நள்ளிரவு நிர்வாண சைக்கோ கொலைகாரரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் பரகுன்று பகுதியை சேர்ந்த 65 வயதான சுந்தர்ராஜ், மார்த்தாண்டம் சி.எஸ்.ஐ தேவாலயத்தில் இரவு காவலாளியாக பணியாற்றி வந்தார். கடந்த 28-ம் தேதி இவர் பணியில் இருந்த நிலையில், நள்ளிரவு நேரத்தில் வந்த வாலிபர் ஒருவர், தேவலயத்தின் முன்பு நிர்வாணமாக நடனமாடியுள்ளார்.

பின்னர் அங்கும் இங்குமாக ஓடுவதை பார்த்த காவலாளி சுந்தர்ராஜ், அவரை ஏன் இங்கு நிற்கிறாய் என்று கேட்டு உள்ளார். அப்போது திடீரென காவலாளி மீது பாய்ந்த சைக்கோ வாலிபர், அவரை கீழே தள்ளிவிட்டு தாக்கியுள்ளார்.

இருவரும் கட்டிப்புரண்டு சண்டை போட்ட நிலையில், அங்கு கிடந்த இரண்டு கல்களை, காவலாளி மீது போட்டு தாக்கியுள்ளார். தொடர்ந்து தேவாலயம் முன் நிர்வாணமாக நடனமாடி விட்டு அங்கிருந்து சென்று விட்டார்.

சைக்கோ இளைஞர் தாக்கியதில் படுகாயம் அடைந்த காவலாளி சுந்தர்ராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காவலாளி சுந்தர்ராஜை கொலை செய்துவிட்டு ஓடிய, சைக்கோ இளைஞர், அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை முன்புறம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்களின் கண்ணாடிகளை உடைத்துள்ளார். அப்போது, சாலையில் நடந்து சென்றவர்களையும் அவர் தாக்கியுள்ளார்.

கொடூர சைக்கோ இளைஞரின் நடமாட்டத்தால், அச்சமடைந்த மார்த்தாண்டம் பகுதி மக்கள், அவரை காவல்துறை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இதை தொடர்ந்து சிசிடிவி காட்சிகளைக்கொண்டு, சைக்கோ இளைஞரை போலீசார் தேடிவந்தனர். இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு, திருவட்டார் கிறிஸ்தவ ஆலயமான ஜார்ஜியார் தேவலாயத்திற்குள் புகுந்த அந்த சைக்கோ இளைஞர், அங்கு இருந்த இயேசுவின் சிலையை சேதபடுத்திவிட்டு தப்பியோட முயன்றார். இதை பார்த்த பொதுமக்கள் அவரை பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், சிக்கிய இளைஞர் மாத்தார் பகுதியை சேர்ந்த ரவி என்பது தெரியவந்தது. மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் கவனிக்க யாரும் இல்லாத நிலையில், இப்படி தெருவில் சுற்றி வந்ததாகவும் போ க்க்லீசார் தெரிவித்துள்ளனர்.

நாளடைவில், கொலை, தாக்குதல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது. மார்த்தாண்டம் சிஎஸ்ஐ தேவாலய கண்காணிப்பு காமிரா பதிவுகளில் உள்ள உருவமும், இவரின் உருவமும் ஒத்துபோவதாகவும் போலீசார் தெரிவித்தனர். இவர் தான் தேவாலய காவலாளி சுந்தர்ராஜை கொலை செய்தவர் என்ற முடிவுக்கு வந்த போலீசார், அவரை கைது செய்தனர்.

கைதானவர் மனநிலை பாதிக்கப்பட்டிருப்பதால், சென்னை கீழ்பாக்கம் மனநிலை மருத்துவமனையில் அவரை சேர்க்க, நடவடிக்கை எடுத்து வருவதாக மார்த்தாண்டம் மற்றும் திருவட்டார் போலீசார் தெரிவித்துள்ளனர். நள்ளிரவில் திடீரென நடனமாடி, குற்றச்செயல்களில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டதால், மார்த்தாண்டம் பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

Also see...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: