• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • இரவில் நிர்வாணமாக திரிந்து கொலை செய்யும் சைக்கோ கில்லர்: அச்சத்தில் மக்கள்

இரவில் நிர்வாணமாக திரிந்து கொலை செய்யும் சைக்கோ கில்லர்: அச்சத்தில் மக்கள்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

சைக்கோ நபர் தேவாலய காவலாளியை கொலை செய்தது மட்டுமல்லாது, சாலையில் நடந்து வந்த பொதுமக்கள் மீதும் தாக்குதல் நடத்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
நள்ளிரவு நேரங்களில் ஆடைகளின்றி நிர்வாணமாக சுற்றித்திரிந்து தாக்குதல் நடத்தும் சைக்கோ நபரால் கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதி மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் பரகுன்று பகுதியை சேர்ந்த 65 வயதான சுந்தர்ராஜ், மார்த்தாண்டம் சி.எஸ்.ஐ தேவாலயத்தில் இரவு காவலாளியாக பணியாற்றி வந்தார்.

கடந்த 28-ம் தேதி இவர் பணியில் இருந்த நிலையில், நள்ளிரவு நேரத்தில் வந்த வாலிபர் ஒருவர், தேவாலயம் முன் வந்து நடனமாடியுள்ளார்.

பின்னர் அங்கும் இங்குமாக ஓடுவதை பார்த்த காவலாளி சுந்தர்ராஜ், அவரை ஏன் இங்கு நிற்கிறாய் என்று கேட்டு உள்ளார். அப்போது திடீரென காவலாளி மீது பாய்ந்த சைக்கோ வாலிபர், அவரை கீழே தள்ளிவிட்டு தாக்கியுள்ளார்.

இருவரும் கட்டிப்புரண்டு சண்டை போட்ட நிலையில், அங்கு கிடந்த இரண்டு கல்களை, காவலாளி மீது போட்டு தாக்கியுள்ளார். பின்னர் அந்த கல்லை தூக்கி தேவலாய படிக்கட்டில் வைத்து விட்டு மீண்டும் அந்த கல்லை தூக்கி புதருக்குள் வீசியுள்ளார்.

தொடர்ந்து தேவாலயம் முன் நிர்வாணமாக நடனமாடி விட்டு அங்கிருந்து சென்று விட்டார். ரத்த வெள்ளத்தில் கிடந்த காவலாளி சுந்தர்ராஜை, அடுத்த நாள் காலையில் மீட்ட சக ஊழியர்கள் மார்த்தாண்டம் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு முதல் உதவி சிகிச்சை பெற்று விட்டு மேல் சிகிச்சைக்காக கேரளாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் காவலாளிக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. இதை தொடர்ந்து கேரளா மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காவலாளி சுந்தர்ராஜ் உயிரிழந்தார்.

இது குறித்த தகவலை தொடர்ந்து தேவாலயத்தில் உள்ள சிசிடிவி கேமிரா காட்சிகளை ஆய்வு செய்த மார்த்தாண்டம் போலீசார், சைக்கோ வாலிபர் காவலாளியை தாக்கிய காட்சிகளை வைத்து, அவரை தேடி வருகின்றனர்.

மார்த்தாண்டம் பகுதியில் இதுவரை கேள்விப்படாத சம்பவமாக இந்த சம்பவம் இருப்பதாக கூறிய மக்கள், இனிமேல் இது போன்ற ஒரு சம்பவம் கூட நடக்க அனுமதிக்க கூடாது என்று வலியுறுத்தினர்.

இந்த சம்பவம் நடைபெற்ற மூன்று நாட்கள் ஆன நிலையில், சைக்கோ வாலிபரை பிடிக்க போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

சைக்கோ நபர் தேவாலயம் மட்டுமல்லாது, மார்த்தாண்டம் மஞ்சு மருத்துவமனை முன்புறம் நிறுத்தி வைக்க பட்டிருந்த கார்களின் கண்ணாடிகளை உடைத்துள்ளார்.

இதுமட்டுமல்லாது சாலையில் நடந்து வந்த பொதுமக்கள் மீதும் அந்த வாலிபர் தாக்குதல் நடத்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது. பொதுமக்கள் அச்சமின்றி நடமாட சைக்கோ வாலிபரை போலீசார் உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று மார்த்தாண்டம் மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Also see...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: