Home /News /tamil-nadu /

குமரி மீனவர்கள் 102 பேர் கரை திரும்பாத சோகம்

குமரி மீனவர்கள் 102 பேர் கரை திரும்பாத சோகம்

குமரி மீனவர்கள் 102 பேர் கரை திரும்பாத சோகம்

  • 1 minute read
  • Last Updated :
கன்னியாகுமரியில் இருந்து எட்டு விசைப்படகுகளுடன் மீன்பிடிக்க சென்ற 102 மீனவர்கள் கரை திரும்பாத நிலையில், அவர்களை மீட்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்...

கடந்த 25-ம் தேதி அரபிக்கடல் பகுதியில் கியார் புயல் உருவானதை தொடர்ந்து, கேரளா மற்றும் குமரி மாவட்ட மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

வானிலை மையத்தின் முன்னெச்சரிக்கையை நடுக்கடலில் கேட்ட மீனவர்கள், கோவா, குஜராத், மகாராஷ்டிரா மற்றும் லட்சத்தீவு போன்ற பகுதிகளின் துறைமுகங்களில் கரை ஒதுங்கினர்.

இதனிடையே, வல்லவிளை, சின்னதுறை, தூத்தூர் பகுதிகளில் இருந்து எட்டு விசைப்படகுகளுடன் மீன்பிடிக்க சென்ற 102 மீனவர்கள் கரை திரும்பாததாக கூறப்படுகிறது. இதனால் அவர்களின் உறவினர்கள் மற்றும் ஊர்மக்கள் சோகத்தில் திகைத்துள்ளனர்.

Published by:Yuvaraj V
First published:

Tags: Cyclone Maha, Cyclonic Kyarr, Fishermen

அடுத்த செய்தி