PUBG காதல்... காவல்நிலையத்தில் திருமணம்... நடந்தது என்ன?

காவல்துறையினர் தேடுவதை அறிந்த காதல் ஜோடிகள் 22ஆம் தேதி காவல்நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.

PUBG காதல்... காவல்நிலையத்தில் திருமணம்... நடந்தது என்ன?
  • News18 Tamil
  • Last Updated: September 24, 2020, 9:55 PM IST
  • Share this:
குமரியில் 'பப்ஜி' மூலம் ஏற்பட்ட காதலால் திருவாரூர் இளைஞருடன் காவல்நிலையத்தில் தஞ்சமடைந்த இளம்பெண்ணை திருமணம் செய்து வைத்து ஜோடியாக போலீசார் அனுப்பி வைத்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே செறுகோல் ஆசாரிபொற்றவிளை சேர்ந்தவர் சசிகுமார். மரவியாபாரியான இவருக்கு இரண்டு மகள்கள். இளைய மகளான 20 வயதான பபிஷா திருவிதாங்கோடு பகுதியிலுள்ள தனியார் கலை கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வந்தார்.

கல்லூரி படிப்பை பாதியில் விட்டவர், வீட்டில் இருந்துள்ளார். மொபைல் போனில் சமீபத்தில் தடை செய்யப்பட்ட பப்ஜி கேமை விளையாடி வந்துள்ளார். அப்போது திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயதான அஜின் பிரின்ஸ் என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. அது பின்னர் காதலாக மாறியது.



கடந்த 19ஆம் தேதி வீட்டைவிட்டு வெளியேறிய பபிஷா சாலையில் காரில் காத்திருந்த அஜின் பிரின்சுடன் தலைமறைவானார். தனது மகளை காணவில்லை என சசிகுமார் திருவட்டார் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகார் குறித்து வழக்குபதிவு செய்த திருவட்டார் போலீசார் இளம்பெண்ணை தேடினர்.

காவல்துறையினர் தேடுவதை அறிந்த காதல் ஜோடிகள் 22ஆம் தேதி காவல்நிலையத்தில் தஞ்சமடைந்தனர். காவல்நிலையம் வந்த அஜின் பிரின்ஸின் பெற்றோர் மகனின் காதலை பிரிப்பதில் குறியாக இருந்தனர். ஆனால் காதலர்களோ சேர்ந்து வாழ்வதிலேயே குறிக்கோளாக இருந்தனர். இருவரும் மேஜர் என்பதால் போலீசார் அவர்களை சேர்த்து அனுப்ப நினைத்தனர்.SCHEDULE TIME TABLE:

இதையடுத்து இரு குடும்பத்தினர் முன்னிலையில் அருகிலுள்ள ஆலயத்தில் மாலை மாற்றி திருமணமும் செய்து அஜின் பிரிஸ்ஸ் - பபிஷா காதல் ஜோடியை தம்பதியாக அஜினின் பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.
First published: September 24, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading