• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • மகளின் திருமணம் என காரணம் கூறி ரூ.1 கோடி கடன் வசூல் மோசடி.. பாதிக்கப்பட்டவர் தீக்குளிப்பு முயற்சி.. நடந்தது என்ன?

மகளின் திருமணம் என காரணம் கூறி ரூ.1 கோடி கடன் வசூல் மோசடி.. பாதிக்கப்பட்டவர் தீக்குளிப்பு முயற்சி.. நடந்தது என்ன?

Youtube Video

கன்னியாகுமரி மாவட்டத்தில், தனது மகளின் திருமணத்திற்கு பண உதவி தேவை என 25-க்கும் மேற்பட்ட பெண்களிடம் ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்த தம்பதியைக் கைது செய்யக்கோரி பாதிக்கப்பட்டவர்கள், தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மோசடியின் பின்னணி என்ன?

  • Share this:
    குமரி மாவட்டம் கடையாலுமூடு செக்கட்டிவிளையைச் சேர்ந்தவர்கள் 56 ஆகாஷ் - 53 கிறிஸ்டினாள் தம்பதி. இவர்களுக்கு ஜீவா என்ற மகளும் ஒரு மகனும் உள்ளனர். சொந்தமாக ரப்பர் மரத் தோட்டமும் உள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக இந்த தம்பதி தங்கள் சுற்றுவட்டாரத்தில் உள்ள வயதான தம்பதி அல்லது பெண்களிடம் பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாக புகார்கள் குவிந்து வருகின்றன.

    தங்கள் மகளுக்கு திருமணம் செய்ய பணம் தேவைப்படுவதாகக் கூறி 25,000 ரூபாய் முதல் 20 ,00,000 ரூபாய் வரை குறைந்த வட்டிக்கு கடனாக தரும்படி கூறி வசூலித்துள்ளனர்.

    கடன் கொடுப்பவர்கள் தங்களை நம்ப வேண்டும் என்பதற்காக அவர்களிடம் ஒரு குறிப்பிட்ட தொகையை வட்டிக்கு வாங்கி சொன்ன தேதியில் வட்டியுடன் திருப்பி அளித்துள்ளனர். இப்படி 25-க்கும் மேற்பட்ட பெண்களிடம் இந்த தம்பதி ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமாக மோசடியில் ஈடுபட்டுள்ளதாக பாதிக்கப்பட்டோர் குற்றம்சாட்டியுள்ளனர்.

    இதுகுறித்து போலீசாரிடம் புகாரளித்த நிலையிலும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதனால் பாதிக்கப்பட்ட மூதாட்டிகள் சிலர், புதன்கிழமை காலை, ஆகாஷ் - கிறிஸ்டினாள் தம்பதி வீட்டின் முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து போலீசார் வந்தபோது ஒரு மூதாட்டி மண்ணெண்ணைய ஊற்றித் தீக்குளிக்க முயன்றார். போலீசார் அவரைக் காப்பாற்றி சமாதானப்படுத்தினர்.

    மேலும் படிக்க...தூத்துக்குடியில் இறைச்சிக்காக மயில்கள் வேட்டை... கொடூர வேட்டை அரங்கேறுவது எப்படி?

    மூதாட்டிகள் போராட்டம் நடத்திய நிலையில் கதவைப் பூட்டிக் கொண்டு வீட்டிற்குள் இருந்து கொண்டார் கிறிஸ்டினாள். போலீசார் அவரை பேச்சுவார்த்தைக்கு அழைத்தும் அவர் வரவில்லை என்று கூறப்படுகிறது.

     

    பாதிக்கப்பட்டோர் அளித்த புகாரின் பேரில் கடையாலுமூடு போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: