பப்ஜி பயங்கரம் - ரீசார்ஜ் செய்ய பணம் தராததால் உயிரை மாய்த்துக்கொண்ட மகன்

கன்னியாகுமரி மாவட்டத்தில் பப்ஜி கேம் விளையாட செல்போனுக்கு 'ரீசார்ஜ்' செய்து தராததால் மாணவர் கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பப்ஜி பயங்கரம் - ரீசார்ஜ் செய்ய பணம் தராததால் உயிரை மாய்த்துக்கொண்ட மகன்
ஆன்றோ பெர்லின் (18)
  • Share this:
கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே உள்ள கணபதிபுரம் தளவாய்புரத்தைச் சேர்ந்தவர் ஆண்டனி டேனியல். கூலித்தொழிலாளியான இவருக்கு ஆன்றோ பெர்லின் (18) என்ற மகன். நாகர்கோவில் அருகில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

ஆன்றோ பெர்லின் வீட்டில் இருக்கும்போது எப்போதும் செல்போனில் பப்ஜி வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருப்பது வழக்கம். இதை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு செல்போனில் நெட் கார்டு தீர்ந்துள்ளது. இதனால் செல்போனுக்கு 'ரீசார்ஜ்' செய்ய தந்தையிடம் ஆன்றோ பெர்லின் பணம் கேட்டுள்ளார். அதற்கு அவர் பணம் கொடுக்க மறுத்ததாக தெரிகிறது. அத்தோடு நின்று விடாமல், பணம் கேட்டு தொடர்ந்து நச்சரித்ததால் செல்போனை போட்டு உடைத்து விடுவேன் என்று மகனை திட்டியதாகவும் தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த ஆன்றோ பெர்லின் தன்னுடைய மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு வெளியே சென்று விட்டார். ஏற்கனவே பல முறை இதே போன்று சில காரணங்களுக்காக வீட்டில் சண்டையிட்டு காணாமல் போவதும் பின்னர் வீட்டிற்கு வருவதும் வழக்கம். ஆனால் பப்ஜி கேம் விளையாட்டிற்காக சண்டையிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை.


அதன் பிறகு ஆன்றோ பெர்லினை பற்றி எந்தவொரு தகவலும் இல்லை. கோபத்துடன் வீட்டிலிருந்து சென்ற மகனைக் காணாததால் பெற்றோர் பல இடங்களில் தேடிப் பார்த்தனர். எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால் ஆண்டனி டேனியல் ராஜக்கமங்கலம் காவல் நிலையத்தில், என்னுடைய மகனைக் காணவில்லை என்று புகார் அளித்தார். போலீசார் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து காணாமல் போன ஆன்றோ பெர்லினைத் தேடி வந்தனர்.

Also see:


இந்த நிலையில், நேற்று முன்தினம் தென்தாமரைகுளம் அருகே சவுக்குத்தோப்பு கடற்கரையில் ஒரு ஆண் பிணம் கரை ஒதுங்கியது. இதனைப் பார்த்தவர்கள் தென்தாமரைகுளம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர் சம்பவ இடம் சென்ற போலீசார் பிணத்தைக் கைப்பற்றினர்.

இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், பிணமாக கிடந்த நபர் தந்தையுடன் தகராறு செய்துவிட்டு சென்ற ஆன்றோ பெர்லின் என்பது தெரியவந்தது. தந்தையிடம் கொண்டு வெளியே சென்ற அவர் கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

பப்ஜி வீடியோ கேம் விளையாட செல்போனுக்கு 'ரீசார்ஜ்' செய்ய தந்தை பணம் தராததால் மாணவர் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.

மாநில உதவிமையம்: 104

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
First published: July 12, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading