• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கந்த சஷ்டி திருவிழா: சூரசம்ஹாரம்- முருகன் கோவில்களில் சிறப்பு ஏற்பாடு!

கந்த சஷ்டி திருவிழா: சூரசம்ஹாரம்- முருகன் கோவில்களில் சிறப்பு ஏற்பாடு!

கோப்புப் படம்

கோப்புப் படம்

கொரோனா தொற்று காரணமாக திருச்செந்தூர் சூரசம்ஹார நிகழ்வில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் சூரசம்ஹார நிகழ்வுகள் நேரலையில் ஒளிபரப்பாக உள்ளது.

  • Share this:
    கந்த சஷ்டி விரதத்தின் சிகர நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று நடைபேறுகிறது. இதையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

    முருக பெருமானுக்கு உகந்த கந்த சஷ்டி விரதம் கடந்த 4ம் தேதி தொடங்கியது. கந்த சஷ்டியின் சிகர நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று நடைபெறுகிறது. அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி மிக சிறப்பாக நடைபெறும். இதனை காண, பல்லாயிரக்கணக்கான மக்கள் அங்கு கூடுவர். தற்போது கொரோனா தொற்று காரணமாக திருச்செந்தூர் சூரசம்ஹார நிகழ்வில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    சூரசம்ஹாரம் நடைபெறும் கடற்கரை நுழைவுவாயில் பகுதியில் 3 பக்கமும் தடுப்புகள் அமைக்கப்படுகிறது. கடற்கரை வழியாக பக்தர்கள் வராதபடி நாழிக்கிணற்றில் இருந்து கடல்நீர் வரை தடுப்பு வேலிகள் அமைக்கப்படுகிறது. பாதுகாப்பு பணியில் 2 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

    திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கந்தசஷ்டி விழாவையொட்டி  இன்று நடைபெற உள்ள சூரசம்ஹார லீலையை முன்னிட்டு 5-ம் நாள் விழாவான நேற்று கோவர்த்தனாம்பிகையிடம் சுப்பிரமணிய சுவாமி வேல் வாங்கும் விழா பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் வெகு விமர்சியாக நடைபெற்றது. சூரசம்ஹார நிகழ்ச்சி உள் திருவிழாவாக நடைபெறுவதையொட்டி கொரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக நாளை மாலை 4 மணி முதல் 7 மணி வரை கோவிலுக்குள் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    இதையும் படிங்க: திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹாரம்: பக்தர்களுக்கு அனுமதி இல்லை


    நேரலையில் சூரசம்ஹார நிகழ்வு

    ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் இன்று மாலை 5.30 மணிக்கு மேல் சூரசம்ஹாரமும் நாளை காலை 08.30 முதல் மலைக்கோயிலில் அருள்மிகு வள்ளி தேவசேனை உடனாய சண்முகர் திருக்கல்யாண நிகழ்வுவும் அருள்மிகு பெரியநாயகியம்மன் திருக்கோயிலில் மாலை 05.30 முதல் அருள்மிகு வள்ளி தேவசேனா சமேத முத்துக்குமாரசுவாமி திருக்கல்யாண நிகழ்வும் நடைபெறகிறது. கொரோனா காரணமாக இந்த நிகழ்வுகள் நேரலையில் ஒளிபரப்பப்பட உள்ளன.

    பக்தர்கள் https://www.youtube.com/channel/UC6kg5EbBPixNm3r2-LZkAxw

    https://www.facebook.com/Arulmigu-Dhandayuthapani-Swamy-Temple-Palani-111481050544508

    http://www.palanimurugan.hrce.tn.gov.in

    ஆகிய தளங்களில் நேரலை ஒளிபரப்பு மூலம்  தரிசித்து அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமியினை நேரலையில் கண்டு இறையருள் பெறுமாறு கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: