ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

IND vs NZ : தொடரும் நடுவர்களின் விளையாட்டு! பந்துகள் உருளும் பிட்ச்: இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு

IND vs NZ : தொடரும் நடுவர்களின் விளையாட்டு! பந்துகள் உருளும் பிட்ச்: இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு

கான்பூரில் நடைபெறும் இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் 4ம் நாளான நேற்று இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 234 ரன்கள் என்று டிக்ளேர் செய்தது. 284 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி நடுவரின் மோசமான தீர்ப்பினால் அஸ்வின் பந்தில் வில் யங் விக்கெட்டை இழந்து 4/1 என்று உள்ளது.

மேலும் படிக்கவும் ...
  • 3 minute read
  • Last Updated :

கான்பூரில் நடைபெறும் இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் 4ம் நாளான நேற்று இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 234 ரன்கள் என்று டிக்ளேர் செய்தது. 284 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி நடுவரின் மோசமான தீர்ப்பினால் அஸ்வின் பந்தில் வில் யங் விக்கெட்டை இழந்து 4/1 என்று உள்ளது.

5ம் நாளான இன்று இந்த நடுவர்களுக்கு எதிராகவும் உருளும் பிட்சுக்கு எதிராகவும் நியூசிலாந்து ட்ரா செய்தால் அது வரலாற்றில் குறிப்பிடப்பட வேண்டியதாகும். பெரிய வாரியம் இந்திய கிரிக்கெட் வாரியம்.. ஆனால் போடுவதோ வங்கதேச ரகப் பிட்ச்கள்! அவங்களுக்கும் அதே பிட்ச்தானே என்று கேட்கலாம் அங்குதான் நடுவர்களின் வேலை உள்ளது. இதனை நேற்று ஆட்ட முடிவில் பார்த்தோம் வில் யங் நாட் அவுட், அதற்கு அவுட் கொடுத்தார் கள நடுவர். பேட்டர் என்ன செய்வார் பாவம் ரிவியூ செய்தால் அம்பயர்ஸ் கால் என்று வந்தால்,  ரிவியூவும் விரயம், அதனால் பாவம் வெளியேறினார்.

அவர் ரிவியூ செய்திருக்கலாமே என்று கூறலாம், ஆனால் அம்பர்யஸ் கால் பிரச்சனை உள்ளதே, நம் கேள்வி என்னவெனில் ஒரு கள நடுவ்ர் 22 யார்டில் நிற்பவருக்கு தெரியாதா இது வெளியே செல்லும் பந்து என்று? எப்படி அவுட் கொடுக்க முடியும்? இதே இந்திய பேட்டராக இருந்தால் கையை உயர்த்துவாரா என்பதே நம் கேள்வி.

ஷ்ரேயஸ் அய்யர் உண்மையில் அசைக்க முடியாத ஒரு இடத்துக்குச் சென்று விட்டார், முதல் இன்னிங்சி 105 ரன்கள், இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி 51/5 என்ற நிலையில் அய்யர் 65 ரன்கள் எடுக்க விருத்திமான் சாஹா 61 நாட் அவுட் என்று கடினமான பிட்சில் நல்ல இன்னிங்சை ஆடியதோடு நடுவர்களும் உதவிக்கரம் நீட்ட இந்திய அணி 2வது இன்னிங்சில் 234 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகளுக்கு டிக்ளேர் செய்தது.

நேற்று காலை கைல் ஜேமிசன், டிம் சவுதீ, அஜாஜ் படேல் இந்திய அணியை 51/5 என்று தோல்வி பயம் காட்டினர். அப்போது அஸ்வின் (32), அய்யர் இணைந்து மேலும் 52 ரன்களைச் சேர்த்தனர். பிறகு அய்யர் மற்றும் சாஹா இணைந்து மேலும் 61 ரன்களை 7வது விக்கெட்டுக்காகச் சேர்த்தனர். ஷ்ரேயஸ் அய்யர் லெக் திசையில் எட்ஜ் ஆகி கேட்ச் ஆக விருத்திமான் சாஹா, அக்சர் படேல் (28) இணைந்து மேலும் 67 ரன்களைச் சேர்த்தனர்.

கடைசியாக இந்திய அணி 234/7 என்று டிக்ளேர் செய்த போது 4 ஓவர்கள் மீதமிருந்தன. அப்போதே வெளிச்சமின்மைதான், ஆனால் நடுவர்கள் ஆட்டத்தை தொடர தீர்மானித்தனர், இதுவே தவறு எனும்போது அஸ்வின் பந்து ஒன்று கணுக்காலுக்குக் கீழே வர பந்தும் லெக் ஸ்டம்புக்கு வெளியே சென்றதாகக் காட்டியது, ஆனால் எல்பி. என்று தீர்ப்பளிக்கப்பட்டார். ரிவியூ செய்ய அதிக நேரம் எடுத்துக் கொண்டார். இதனால் டைம் காலாவதியானது, ஆனால் அது அம்பயர்ஸ் கால் என்று வந்திருக்கும். இதுதானே திருவிளையாடல். நியூசிலாந்து பேட்ஸ்மென்களுக்கு கேட்டவுடன் அவுட் தருவது அவர்கள் ரிவியூ செய்து விரயம் செய்ய வேண்டும், மாறாக நியூசிலாந்து பவுலிங் செய்யும் போது இந்திய பேட்டர்களுக்கு நாட் அவுட் என்பது, அப்போதும் எதிரணியினர் ரிவியூ செய்து இழக்க வேண்டும்.

வில் யங் ரிவியூ செய்யவில்லை என்பது ஒருபுறம் இருக்க இதற்கு நடுவர் அவுட் கொடுத்தது எப்படி?

அதாவது இந்திய நடுவர்கள் மூலம் ஒரே கல்லில் இரண்டு மாங்காய், நியூசிலாந்து பேட்டர்களும் அவுட், ரிவியூவும் காலியாக வேண்டும், அதே போல் பவுலிங்கிலும் அப்படித்தான் இந்திய பேட்டர்களும் ஆட்டமிழக்கக் கூடாது எதிரணி ரிவியூவை இழக்க வேண்டும்.

ஷ்ரேயஸ் அய்யர் உள்நாட்டு பிட்ச்களில் உள்நாட்டு கிரிக்கெட்டில் அதிகம் ஆடுவதால் அவர் அனாயசமாக பந்து வந்தவுடன் லேட் ஆக ஆடி அரைசதம் கண்டார். அறிமுக டெஸ்ட் போட்டியில் சதம், அரைசதம் கண்ட ஒரே இந்திய வீரர் ஆனார் அய்யர். மொத்தமாக இந்த சாதனையைச் செய்த 16வது வீரர்.

புஜாரா, ரகானே, மாயங்க் அகர்வால் அனேகமாக தங்கள் இடங்களை தக்கவைப்பது கடினம், புஜாரா ஆட்டமிழந்தது கொடுமை, ஜேமிசன் ஷார்ட் பிட்ச் பந்து என்னை அடி அடி என்று லெக் ஸ்டம்பில் வருகிறது ஹூக், புல் ஆடாமல் அதை தடுத்தாடினார். இவ்வளவு அனுபவம் ஆகியும் இந்திய பிட்ச்களில் கூட ஹூக் ஷாட் ஆடாமல் தடுத்து எட்ஜ் ஆகி அவுட் ஆகும் வீரர் அணியில் நீடிப்பது கடினம், ரகானே 14 பந்துகள் கழித்து 1 ரன் எடுக்கிறார், கடைசியில் அஜாஜ் படேலின் நேர் நேர் தேமா, அக்சர் படேல் ரக பந்தில் எல்.பி.ஆகி வெளியேறினார்.

கான்பூர் பிட்ச் குழி பிட்ச் என்று சொல்ல முடியாவிட்டாலும், பந்துகள் சில ஸ்பாட்களில் பிட்ச் ஆனால் கணுக்காலுக்குக் கீழ் உருண்டு செல்கிறது. முதல் இன்னிங்சில் அக்சர் படேலின் 3 விக்கெட்டுகள் பந்து உருண்டதால் எடுத்த விக்கெட்டே. பணம் கொழிக்கும் கிரிக்கெட் வாரியம் ஒரு உண்மையான பிட்சைப் போடக் கூட திராணியில்லாமல் இருப்பது ஆச்சரியமே.

First published: