கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டணம் அருகே 6-ம் வகுப்பு மாணவியை கர்ப்பிணியாக்கிய வாலிபர் கைது தனக்கு பாதுகாப்பு என நம்பி அடைக்கலம் கொடுத்த நபரே தனது மகளிடம் அத்துமீறியதாகவும் தாய் பரபரப்பு புகார்.
கன்னியாகுமரி மாவட்ட குழந்தைகள் நல அதிகாரிக்கு நேற்று மாலை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பெண் ஒருவர் தான் தேங்காய்பட்டணத்தில் இருந்து பேசுவதாகவும் 6-ம் வகுப்பு படிக்கும் 11-வயதான சிறுமியை வாலிபர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்து வருவதாகவும் தட்டி கேட்ட தாய் மற்றும் சிறுமியை வீட்டிலேயே அந்த வாலிபர் மிரட்டுவதாகவும் அவர்களை நீங்கள் தான் மீட்க வேண்டும் என அவர் தகவலளித்தார்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த குழந்தைகள் நல அதிகாரிகள் அந்த பெண்மணியின் வீட்டிற்கு சென்ற போது வாலிபர் ஒருவர் அந்த வீட்டில் இருந்து தப்பியோடிய நிலையில் அந்த பெண் மற்றும் சிறுமியை மீட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில்
சின்னத்துறை மீனவ கிராமத்தை சேர்ந்த அந்த பெண் கடந்த ஒரு வருடத்திற்கு முன் தனது கணவரை பிரிந்த நிலையில் தேங்காய்பட்டணம் அடுத்த அம்சி என்ற பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தனது மகன் மற்றும் மகழுடன் வாழ்ந்து வந்துள்ளார்.
கணவரை பிரிந்து வாழும் அந்த பெண் கூலி தொழில் செய்து குழந்தைகளை பராமரித்து வந்த நிலையில் புதுக்கடை பகுதியை சேர்ந்த செய்யதலி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் செய்யதலியும் அந்த பெண்ணுடன் நெருங்கி பழகி தனக்கும் உறவுகள் இல்லை நாம் இருவரும் சேர்ந்து வாழ்வோம் என ஆசை வார்த்தைகளை அள்ளி வீசியதாகவும்
இதை நம்பிய அந்த பெண் செய்யதலி க்கு ஒரு ஆட்டோ வாங்கி கொடுத்ததோடு தனது வீட்டிலேயே அடைக்கலம் கொடுத்து கணவன் மனைவியாக வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் வாலிபர் ஒருவருடன் வீட்டிற்கு வந்த செய்யதலி இது தனது தம்பி ரியாஸ் என்றும் இவர் தற்போது கஞ்சா வழக்கு ஒன்றில் சிக்கி சிறைக்கு சென்று ஜாமீனில் வெளி வந்துள்ளதாகவும் சில நாட்கள் அடைக்கலம் கொடுக்க வேண்டும் என கூறி அங்கேயே தங்க வைத்துள்ளதார்,
தான் மார்ச் மாதம் 23-ம் தேதி அந்தப்பெண் மருத்துவமனைக்கு சென்ற நிலையில் கஞ்சா போதையில் இருந்த கஞ்சா வியாபாரி ரியாஸ் சிறுவனிடம் செல்போணை கொடுத்து வெளியே சென்று விளையாட அனுப்பி வைத்து வீட்டில் இருந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளான்.தொடர்ந்து குடும்பத்துடன் கொலை செய்து விடுவேன் என மிரட்டி தொடர்ந்து பலமுறை பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இந்நிலையில் வயிற்று வலியாக இருப்பதாகவும் அத்துமீறல் குறித்து சிறுமி தாயிடம் தெரிவித்த நிலையில் செய்யதலி இடம் முறையிட்டுள்ளார். அப்போது செய்யதுஅலி தம்பிக்கு ஆதரவாக அந்தப்பெண்ணை மிரட்டியுள்ளார். மேலும் இந்த விவகாரம் வெளியே தெரியாமல் இருக்க இருவரும் தாயையும் மகளையும் வீட்டிலேயே சிறை வைத்து மிரட்டி வந்துள்ளனர்.
Also Read: வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை குறிவைத்து பாலியல் தொல்லை - சிக்கிய அரிசி மண்டி உரிமையாளர்
இந்த நிலையில் தான் பக்கத்து வீட்டு தோழி ஒருவர் உதவியுடன் குழந்தைகள் நல அதிகாரிகளை தொடர்பு கொண்டதாகவும் தனக்கு பாதுகாப்பாக இருப்பார்கள் என நம்பி அடைக்கலம் கொடுத்த நிலையில் தனது மகளை அத்துமீறி பாலியல் பலாத்காரம் செய்ததோடு தன்னையயும் மிரட்டுவதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
இதனையடுத்து குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெண்ணின் வாக்குமூலத்தை புகாராக கொடுத்த குழந்தைகள் நல அதிகாரிகள் அந்த சிறுமியை சிகிச்சை மற்றும் மருத்துவ பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவ கல்லூரி மத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அந்த சிறுமி கர்ப்பமாக இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து வழக்கு பதிவு செய்த குளச்சல் அனைத்து மகளிர் போலீசார் கஞ்சா வியாபாரி ரியாஸை கைது செய்து நாகர்கோவில் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Illegal affair, Kanyakumari, Minor girl, POCSO case, Police arrested, Sexual abuse, Sexual harrasment