கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி

2014-ம் தேர்தலில் வாக்குப்பதிவு 2.70% அதிகரித்து 67.69% ஆகப் பதிவானது.

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி
கன்னியாகுமரி
  • News18
  • Last Updated: March 15, 2019, 5:44 PM IST
  • Share this:
மீனவ மக்கள் அதிகம் வாழும் பகுதியாகவும், தமிழ்நாட்டு எல்லையாகவும் விளங்கும் கன்னியாகுமரி  தொகுதி மறு சீரமைப்பின் போது நாகர்கோவில் மக்களவைத் தொகுதி என்ற பெயரில் இருந்து கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியாக பெயர் மாற்றம் கண்டது.

கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், திருவட்டாறு, விளவங்கோடு, கிள்ளியூர் உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிகள் நாகர்கோவில் மக்களவைத் தொகுதியில் இருந்தன.

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியாக மறுசீரமைப்பு செய்யப்பட்டபோது, திருவட்டாறு சட்டமன்ற தொகுதி மட்டும் இதிலிருந்து நீக்கப்பட்டது. பெயர் மாற்றம் செய்த பிறகு நடைபெற்ற 15-வது தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் ஹெலன் டேவிட்சன் 3,20,161 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.


அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பா.ஜ.க வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணன் 2,54,474 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். ஆனால், கடந்த மக்களவைத் தேர்தலில் பொன். ராதாகிருஷ்ணன் 3,72,906 வாக்குகள் பெற்று தமிழ் நாட்டில் பா.ஜ.க 2014-ம் ஆண்டு வெற்றி பெறக் காரணமாக மாறினார்.

அவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் வசந்தகுமார் 2,44,244 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். அ.தி.மு.க-வின் ஜான் தங்கம் 1,76,239 வாக்குகளையும் தி.மு.க-வின் ராஜரத்தினம் 1,17,933 வாக்குகளையும் பெற்றுத் தோல்வி அடைந்தனர்.

2014-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 39 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி அதிகமான வாக்குகளை கன்னியாகுமரியில் பதிவு செய்ததும் குறிப்பிடத்தக்கது. 2009-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் 64.99% ஆக பதிவான வாக்கு எண்ணிக்கை 2014-ம் தேர்தலில் 2.70% அதிகரித்து 67.69% ஆகப் பதிவானது.
First published: March 15, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்