பறந்து போன காதலி... அந்தரங்க படங்களை வாட்ஸ்அப்-ல் அனுப்பிய காதலன் கைது...!

குமரி அருகே காதலை கைவிட்டு வேறு நபரை திருமணம் செய்ய நினைத்த காதலி உடன் எடுத்த அந்தரங்க படத்தை வாட்ஸ்ஆப்பில் வெளியிட்ட காதலர் கைது செய்யப்ட்டுள்ளார்.

  • News18
  • Last Updated: June 3, 2020, 10:23 AM IST
  • Share this:
கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் 45 வயதான பெண். கணவர் இறந்த நிலையில் தனது இரண்டு மகள்களுடன் வசித்து வருகிறார். 26 வயதான அவரது மூத்த மகள் குவைத்தில் உள்ள மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார்.

அவர் வெளிநாடு செல்வதற்கு முன் கன்னியாகுமரி மாவட்டம் காட்டுபுதூர் பகுதியை சேர்ந்த 26 வயதான மர்பின் தனேஷ் என்ற இளைஞர் முகநூல் மூலம் அறிமுகமாகியுள்ளார். பின்னர் அந்த நட்பு காதலாக மாறி உள்ளது. இருவரும் நெருக்கமாக இருந்தபோது, மர்பின் தனேஷ் அதை போட்டோ எடுத்துள்ளார்.

இருவரும் திருமணம் செய்யும் எண்ணத்தில் இருந்ததால் அந்த பெண்ணும் அதற்கு மறுப்பு தெரிவிக்காமல் போட்டோ எடுப்பதை அனுமதித்துள்ளார். இந்நிலையில், 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் அந்த பெண்ணிற்கு குவைத் நாட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியர் பணி கிடைத்து சென்றுள்ளார்.


அதன் பிறகு அந்த பெண் தனேஷ் உடன் பேசுவதை தவிர்த்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தனேஷ் மீது அந்த பெண்ணின் தாயார் அச்சு கிராமம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அந்த புகாரில் தனேஷ் பணம் கேட்டு தனது மகளை மிரட்டுவதாகவும், பணம் தரவில்லை என்றால் காதலிக்கும் போது எடுத்த அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைதளத்தல் வெளியிட்டு விடுவதாக மிரட்டுவதாக கூறியிருந்தார்.

மேலும் தனது வீட்டிற்கு வந்து 5 லட்சம் ரூபாய் பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் புகாரில் கூறியிருந்தார். பெண்ணின் தாயாரின் புகார் அடிப்படையில் தனேஷை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.விசாரணையில் அந்த பெண்ணும் தானும் காதலித்து வந்த நிலையில், அவருக்கு வெளிநாட்டில் வேலை கிடைத்ததாக தனேஷ் கூறியுள்ளார். வெளிநாடு செல்ல பணம் கொடுத்து உதவியதாகவும், அங்கு சென்றபின் தன்னிடம் பேசுவதை தவிர்த்துவிட்டு வேறு நபரை காதலிக்க அவர் தொடங்கிவிட்டதாக தனேஷ் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், அந்த நபருடன் தனது காதலிக்கு திருமணம் செய்துவைக்க அவரது தாயார் திட்டமிட்டு வருவதாகவும் கூறியுள்ளார். இதனால் இருவரும் பழகிய நாட்களில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை, அந்த பெண்ணின் தனிப்பட்ட வாட்ஸ்ஆப் எண்ணிற்கு அனுப்பி நியாயம் கேட்டதாகவும், அதற்கு பழிவாங்கவே தன் மீது புகார் அளிக்கப்பட்டதாக தனேஷ் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

இதை அடுத்து பெண்ணின் அனுமதி இல்லாமல் அவரின் புகைப்படத்தை வாட்ஸ்ஆப்பில் பகிர்ந்த தனேஷ் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர் .

Also See: சீனாவைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்..? உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்


First published: June 3, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading