ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

கள்ளக்காதலியுடன் சொகுசு வாழ்க்கை.. பெண்களை டார்க்கெட் செய்து செயின் பறிப்பு - குமரியில் சிக்கிய பட்டதாரி இளைஞர்

கள்ளக்காதலியுடன் சொகுசு வாழ்க்கை.. பெண்களை டார்க்கெட் செய்து செயின் பறிப்பு - குமரியில் சிக்கிய பட்டதாரி இளைஞர்

கன்னியாகுமரி

கன்னியாகுமரி

Kanyakumari | செயின் பறிப்பில் கிடைக்கும் பணத்தில் சொகுசு காரில் கள்ளகாதலியுடன் உல்லாசமாக இருந்துள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடையில் தனியாக இருக்கும் பெண்களை குறிவைத்து செயின் பறிப்பில் ஈடுபட் பட்டதாரி வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல், கருங்கல், இரணியல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக தனியாக கடையில் இருக்கும் பெண்களை குறி வைத்து இருசக்கர வாகனத்தில் வரும் மர்ம நபர் பெண்களில் தாலி சங்கிலியை பறித்து தப்பியோடுவது தொடர் கதையானது. தாலி சங்கிலியை பறித்து தப்பியோடும் அந்த தில்லாலங்கடி திருடனை பிடிக்க குளச்சல் டிஎஸ்பி தங்கராமன் மேற்பார்வையில் உதவி ஆய்வாளர் ஜாண் போஸ்கோ தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

Also Read: பெண்ணை கொலை செய்து, நிர்வாணமாக்கி, கல்லை கட்டி கிணற்றில் வீசிய உறவினர் கைது - பரபரப்பு வாக்குமூலம்

சங்கிலி பறிப்பு சம்பவங்கள் நடைபெற்ற பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை தனிப்படை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தியதில் இருசக்கர வாகனத்தில் டிப்டாப் ஆக தனி ஒருவனாய் வலம் வரும் வாலிபர் செயின் பறிப்பு சம்பவத்தை அரங்கேற்றி தப்பி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. தொடர்ந்து அந்த டிப்டாப் திருடன் போலீசாருக்கு போக்கு காட்டி வந்த நிலையில்

நேற்று தனிப்படை போலீசார் கருங்கல் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது சிசிடிவி காட்சிகளில் பதிவாகியிருந்த வாகனத்தை வாலிபர் ஒருவர் ஓட்டி வருவதை கண்டு அந்த வாகனத்தை மடக்கி வாலிபரை கருங்கல் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அந்த வாலிபர் வில்லுக்குறி பகுதியை சேர்ந்த 28-வயதான ஆன்றோ சுபின் என்பதும் பி.ஏ பட்டதாரியான இவர் அழகியமண்டபம் பகுதியில் அக்வேரியம் கடை நடத்தி வந்தது தெரியவந்தது.  போலீஸாரின் தொடர் விசாரணையில் பல சுவாரஸ்ய  தகவல்களும் வெளியானது. பட்ட படிப்பை முடித்த ஆன்றோ சுபின் அக்வேரியம் கடை நடத்தி வந்த நிலையில் தனது பக்கத்து ஊரை சேர்ந்த பெண் ஒருவருடன் கள்ள தொடர்பு ஏற்பட்ட நிலையில் வீட்டை விட்டு வெளியேறி அந்த பெண்ணுடன் வாழ தொடங்கியுள்ளார்.

Also Read: மசாஜ் நிலையங்களில் விபச்சாரம் நடந்தால்... உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

ஒரு கட்டத்தில் கள்ளகாதலி எதாவது அரசு வேலைக்கு செல்ல நிர்பந்தித்ததாகவும் இதற்காக இரண்டு வருடத்திற்கு முன்னால் 5-லட்ச ரூபாய் வட்டிக்கு வாங்கி புரோக்கர் ஒருவரிடம் கொடுத்ததாகவும் அவர் வேலை வாங்கி தராமல் ஏமாற்றியுள்ளார்.

வருமானம் இல்லாததால் வேலைக்கு வாங்கிய பணத்திற்கு வட்டி கட்ட முடியாமல்  ஆன்றோ சுபின் தலைமறைவாகியுள்ளார்.

இந்த நிலையில் தான் கடந்த ஒரு வருடமாக கடையில் தனியாக இருக்கும் பெண்களை குறிவைத்து செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டதாகவும் அதை விற்று கிடைக்கும் பணத்தில் வாங்கிய கடனுக்கு வட்டி கட்டுவதும் சொகுசு காரில் கள்ளகாதலியுடன் சொகுசாக சுற்றுவதுமாக இருந்துள்ளார்.

இதுவரை 9-நபர்களிடம் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.  இதனையடுத்து ஆன்றோ சுபினை கைது செய்த கருங்கல் போலீசார் அவரிடம் இருந்து 30-சவரன் தங்க நகை 1 சொகுசு கார் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்ததோடு அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.

First published:

Tags: Chain Snatching, Crime News, Illegal affair, Illegal relationship, Kanyakumari, Tamil News, Youth arrested