Home /News /tamil-nadu /

‘கிராண்ட் சன் ஆஃப் நாகர்கோவில் எம்எல்ஏ எம்.ஆர். காந்தி’- வைரல் புகைப்படத்தின் பின்னணி என்ன?

‘கிராண்ட் சன் ஆஃப் நாகர்கோவில் எம்எல்ஏ எம்.ஆர். காந்தி’- வைரல் புகைப்படத்தின் பின்னணி என்ன?

புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் பலரும் அவரின் செயல் சட்டத்திற்கு புறம்பானது என மீம்ஸ் மூலம் விமர்சனம் செய்து தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் பலரும் அவரின் செயல் சட்டத்திற்கு புறம்பானது என மீம்ஸ் மூலம் விமர்சனம் செய்து தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் பலரும் அவரின் செயல் சட்டத்திற்கு புறம்பானது என மீம்ஸ் மூலம் விமர்சனம் செய்து தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

‘கிராண்ட் சன் ஆஃப் நாகர்கோவில் எம்எல்ஏ எம்.ஆர். காந்தி’ என்று நம்பர் ப்ளேட்டுக்கு பதில் இந்த ஆங்கில வாசகத்துடன் இளைஞர் ஒருவர் பைக்கில் அமர்ந்திருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் தொகுதியின் எம்எல்ஏவாக பாஜகவை சேர்ந்த எம்.ஆர். காந்தி உள்ளார். கடந்தாண்டு நடந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்த பாஜக நான்கு இடங்களில் வெற்றி பெற்றது.

குறிப்பாக, 76 வயதான பாஜக மூத்த தலைவர் எம்.ஆர்.காந்தி, முதல் முறையாக எம்.எல்.ஏ.வானது மக்களின் கவனத்தை ஈர்த்தது. எம்.ஆர்.காந்தி 1980 முதல் தேர்தலில் போட்டியிட்டு, தொடர்ச்சியாக 6 முறை தோல்வியடைந்து, 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் வெற்றியை ருசித்தார். தற்போது நாகர்கோவில் தொகுதி உறுப்பினராக சட்டசபைக்குள் நுழைந்துள்ளார்.

இதையும் படிங்க | பனை மரங்கள் ஏன் அவசியம்? கடல் அரிப்பை தடுக்க பனை மரங்கள் எவ்வாறு பங்களிக்கின்றன?

எளிமையின் அடையாளமாக இருக்கும் எம்.ஆர்.காந்தி, கதர் ஜிப்பா மற்றும் வேட்டியை அணிவது வழக்கம். காலணி இல்லாமல் சட்டசபைக்கு செல்பவர், கட்சி பணிகளுக்காக திருமணம் செய்யாமல் வாழ்பவர் என அவரைப் பற்றி கட்சி உறுப்பினர்கள் உயர்வாக சொல்லிக்கொண்டிருக்கும் நிலையில் இளைஞர் ஒருவரின் இந்த செயல் பேசுபொருளாக மாறியுள்ளது.

இதற்கிடையே, எம்.ஆர்.காந்தியின் கார் ஓட்டுநராக இருந்த கண்ணன் என்பவர், பல ஆண்டுகளாக அவருக்கு ஆதரவாக இருந்து வந்துள்ளார். இதனால், எம்.ஆர்.காந்தி எம்எல்ஏ ஆவதற்கு முன்பே கண்ணன் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் மிகுந்த பாசத்துடன் பழகி வந்துள்ளார். ஓட்டுநராக இருந்து இப்போது எம்.ஆர்.காந்திக்கு நெருங்கிய உதவியாளராக இருந்து வருகிறார் கண்ணன். இந்நிலையில், கட்சிப் பணிக்காக திருமணம் கூட செய்து கொள்ளாத எம்.ஆர்.காந்தியின் பேரனா என குழப்பமூட்டும் அந்த இளைஞர் யார் என விசாரித்ததில், எம்.ஆர்.காந்தியின் உதவியாளர் கண்ணனின் மகன் அம்ரிஷ் என்பது தெரிய வந்துள்ளது. நம்பர் பிளேட்டில் எண்களுக்குப் பதிலாக ‘கிராண்ட் சன் ஆஃப் நாகர்கோவில் எம்எல்ஏ எம்.ஆர். காந்தி’ என எழுதப்பட்ட வாசகத்துடன் பைக்கில் சுற்றிக் கொண்டிருக்கிறார் அம்ரிஷ் என்ற அந்த இளைஞர். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க | ஆண்களையும் பாதிக்கும் மார்பகப் புற்றுநோய்- தெரிந்துகொள்ள வேண்டியவை!

இந்நிலையில், அந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் பலரும் அவரின் செயல் சட்டத்திற்கு புறம்பானது என மீம்ஸ் மூலம் விமர்சனம் செய்து தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். ஆனாலும், திருமணமாகாத எம்எல்ஏ எம்.ஆர்.காந்திக்கு கண்ணன் மீதும், அவரது குடும்பத்தினர் மீதும் தனிப்பாசம் உண்டு என கட்சி வட்டாரங்கள் தெரிவிகின்றன. இறுதியில், இந்த விஷயம் தொடர்பாக பாஜகவை சேர்ந்தவர்களிடம் கேட்டபோது, பாசத்தின் அடையாளமாக அம்ரிஷ் தனது பைக்கில் அவ்வாறு எழுதியதாகக் கூறுகின்றனர்.
Published by:Archana R
First published:

Tags: Bike, Nagercoil, Tamil Nadu

அடுத்த செய்தி