Home /News /tamil-nadu /

நட்பாக பழகிய தோழியின் தாயார் குளிப்பதை படம் பிடித்து மிரட்டிய இளைஞர்... அதிர்ச்சி சம்பவம்

நட்பாக பழகிய தோழியின் தாயார் குளிப்பதை படம் பிடித்து மிரட்டிய இளைஞர்... அதிர்ச்சி சம்பவம்

தோழியின் தாயார் குளிப்பதை படம் பிடித்து மிரட்டிய இளைஞர்

தோழியின் தாயார் குளிப்பதை படம் பிடித்து மிரட்டிய இளைஞர்

Nagercoil : நாகர்கோவிலில் செவிலியரிடம் நட்பாக பழகி, அவரின் தாயார் குளிப்பதை படம் பிடித்து மிரட்டிய இளைஞரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே தனியார் மருத்துவமனையில் ரத்தம் கொடுக்க சென்ற இடத்தில் தோழியான  செவிலியரிடம் நட்பாக பழகி தோழியின் தாயார் குளிப்பதை படம் பிடித்து மிரட்டிய இளைஞரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கிரீன் தெருவை  சேர்ந்த 21 வயது இளைஞர் பார்த்திபன். தனியார் பயற்சி பள்ளியில்  படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஓர் ஆண்டிற்கு முன்பு நாகர்கோவில் பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் மருத்துவமனையில் இரத்த கொடையாளராக சென்றுள்ளார். அங்கு பயிற்சி நர்சாக பணியாற்றிய இளம் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து இருவரும் நட்பாக பழகி வந்த நிலையில், இளம் பெண்ணின் வீட்டிற்கு பார்த்திபன் சென்று வந்துள்ளார். அங்கு இளம் பெண்ணின் 49 வயதுடைய தாயாரிடம் பார்த்திபனுடன் பேசி பழகி வந்துள்ளார். இந்நிலையில் பார்திபனின்  நடவடிக்கை பிடிக்காத இளம்பெண் அவருடன் நட்பை  முறித்து கொண்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அந்த இளம் பெண்ணிற்கு கடந்த 6 மாதங்கள் முன்பு திருமணம் நடந்துள்ளது.  தனது நட்பை  முறித்து கொண்ட தோழியை  சில நாட்களுக்கு முன்பு நேரில் சந்தித்த பார்த்திபன், தனக்கு 50 ஆயிரம் ரூபாய் தர வேண்டும் என கேட்டுள்ளார். அதற்கு மறுப்பு தெரிவித்த இளம்பெண்ணிடம், நீ பணம் தரவில்லை என்றால் உனது தாயார் குளிக்கும் வீடியோக்கள் என்னிடம் உள்ளன. அதனை சமூக வலைதளங்களில்  பதிவேற்றம் செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார்.

Must Read : பிரசாந்த் கிஷோர் உடன் விஜய் - போஸ்டர் அடித்து பரபரப்பை கிளப்பிய விஜய் ரசிகர்கள்...

இதனால் அதிர்ச்சியுற்ற அந்த இளம்பெண் தனது தாயாருடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார். புகாரின்  பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் பார்த்திபனை  கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் அவரது செல்போனில் ஆபாச வீடியோக்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக அவரது செல்போன் பறிமுதல் செய்யப்பட்டதோடு பார்த்திபனையும் போலீசார் சிறையில் அடைந்தனர்.

செய்தியாளர் : ஐ.சரவணன்,  நாகர்கோவில்.
Published by:Suresh V
First published:

Tags: Crime News, Kannyakumari, Nagarkovil, Youth arrested

அடுத்த செய்தி