கன்னியாகுமரியில் கொரோனாவால் உயிரிழப்போரின் உடல்களை நல்லடக்கம் செய்யும் இளைஞர்கள்..

Youtube Video

குமரி மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழப்போரின் உடல்களை, தங்கள் உயிரைப்பற்றி கவலைப்படாமல் சில குழுவினர் நல்லடக்கம் செய்து, உன்னத சேவையில் ஈடுபட்டு வருகின்றனர். 

 • Share this:
  கன்னியாகுமரி மாவட்டத்தில் தினசரி கொரோனா பாதிப்பு ஆயிரத்துக்கும் மேல் பதிவாகி வருகிறது. அந்த மாவட்டத்தில் 48 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு நாள்தோறும் 25 பேர் வரை உயிரிழக்கின்றனர். இந்த பேரிடரின்போது ஏழை எளிய மக்கள் முதல் அனைத்துத் தரப்பினரும் தங்கள் ஆதரவு கரத்தை நீட்டி வருகின்றனர். இதேபோல சேவா பாரதி, இளைஞர் காங்கிரஸ், அனஸ்வரா நிறுவனம் மற்றும் பைரவா காவு சேவா டிரஸ்ட் போன்ற அமைப்புகளின் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் மாவட்டம் முழுக்க மக்களுக்கு உணவு மற்றும் மருந்து உள்ளிட்ட உதவிகளை செய்து வருகின்றனர்.

  இதில் கொரோனாவால் உயிரிழந்தோரின் உடல்களை தொட உறவுகளே அஞ்சும் சூழலில் இதுவரை 60 உடல்களை நல்லடக்கம் செய்து நெகிழ வைத்துள்ளனர் சேவா பாரதி தொண்டர்கள். இறந்த நபர்களின் மத சடங்குகளையும் மிகச்சரியாக செய்கின்றனர்,

  இளைஞர் காங்கிரஸ் கட்சியினரோ இதுவரை 72 உடல்களை அடக்கம் செய்துள்ளனர். அந்த மாவட்டத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்த ஒரு நபரின் உடலை உறவினர்கள் சாலையோரம் வீசிச்சென்ற அவலமும் நடந்துள்ளது. அவ்வாறு ஆதரவற்றோர் மற்றும் உறவினர்களே தொட தயங்கிய 50க்கும் மேற்பட்ட சடலங்களை அனஸ்வரா மற்றும் பைரவ காவு அறக்கட்டளையினரும் நல்லடக்கம் செய்துள்ளனர்.  மேலும் படிக்க... நோய் நீக்கி, இழந்த பதவியை பெற்றுத்தரும் ஊட்டத்தூர் சிவன் கோயில்...

  உற்றார், உறவினர்கள் அச்சத்துடன் உடல்களை சொந்த வீடுகளுக்கே கொண்டு செல்ல தயங்கி வரும் இந்த காலகட்டத்தில், தங்களின் உயிரையும் துச்சமென கருதி சேவை செய்யும் இது போன்ற அமைப்புகளால் மனிதம் இன்னும் மரணிக்கவில்லை என்பதுதான் நிஜம்,

  செய்தியாளர்: சஜ்ஜய குமார். கன்னியாகுமரி  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: