கேரளா மாநிலம் கொல்லம் அருகே கிணறு சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட தொழிலாளி கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கேரளா மாநிலம் கொல்லம் அருகே எழுகோண் இரும்பனங்காடு கொச்சுதுண்டில் உள்ள ஒருவரது வீட்டில் கிரிஷ் குமார் என்ற தொழிலாளி ஒருவர் கிணறு சுத்தம் செய்த பின்னர் கிணற்றுக்குள் இருந்து வெளியேறும் போது கால் தவறி கிணற்றுக்குள் விழுந்து மாயமானார்.
இதனை தொடர்ந்து மாலை ஆறு மணிக்கு இரண்டு தீயணைப்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
ஆனால் கிணற்றில் மண் சரிவு ஏற்பட்டு மீட்பு பணிகள் கடும் சவாலாக இருந்து வந்த நிலையில் இரவு எட்டு மணிக்கு இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டு கிணற்றின் உள்பகுதியிலும் அதே போல மேல் பக்கங்களிலும் மண் அள்ளும் பணி தொடங்கியது. இரண்டு ஜேசிபிகள் இரண்டு ஹிட்டாச்சி இயந்திரங்கள் மூலம் மீட்பு பணி விடிய விடிய நடைபெற்று வந்தது.
ஆனால் கிரிஷ்ஸை உயிருடன் மீட்க 18 மணி நேரமாக போராடிய தீயணைப்பு வீரர்களின் முயற்சி தோல்வியடைந்து. கடைசியில் சடலமாக மீட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.